ஒரே ஒரு மாணவிக்காக இயக்கப்பட்ட படகு போக்குவரத்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஒரே ஒரு மாணவிக்காக இயக்கப்பட்ட படகு போக்குவரத்து

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (1)
Share

திருவனந்தபுரம்: பிளஸ் ஒன் தேர்வு எழுத சென்ற ஒரே ஒரு மாணவிக்காக 70 பேர் பயணிக்க கூடிய படகு இயக்கப்பட்டது.



latest tamil news



கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கேரளா மாநிலத்தில் நடைபெற இருந்த பிளஸ் ஒன் பொதுதேர்வின் இரண்டு பாடங்கள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த வெள்ள மற்றும் சனிக்கிழமைகளில் விடுபட்ட தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆலப்புழா மாவட்டம் குட்டநாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு செல்ல படகு இயக்க உதவ வேண்டும் என நீர்வழி போக்குவரத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.


latest tamil news



இதனையடுத்து மாணவியின் கோரிக்கையை ஏற்ற சம்பந்தப்பட்ட துறை 70 பேர் பயணிக்க கூடிய படகு ஒன்றை இயக்க அனுமதித்தது. அது மட்டுமல்லாது மாணவி தேர்வு எழுதி முடித்த பிறகு மாணவியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து சேர்த்துள்ளது. மாணவி ஒரே ஒருவருக்காக படகு போக்குவரத்து இயக்க பட்ட போதிலும் பயணக்கட்டணம் எப்போதும் வசூலிப்பது போன்றே ரூ.18 மட்டுமே வசூலிக்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X