பொது செய்தி

இந்தியா

மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழும் தெலுங்கானா போலீஸ்

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020
Share
Advertisement
ஐதராபாத் : தெலுங்கானாவில் தொழில்நுட்பங்களை தகுந்த முறையில் பயன்படுத்தியும், மாநில அரசின் சிறந்த நடவடிக்கைகளால் குற்றங்களை தடுக்கும் பணிகளிலும் சிறந்து விளங்கி தெலுங்கானா போலீசார் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது முதல் தற்போது வரை சிறந்த மற்றும் நவீன

ஐதராபாத் : தெலுங்கானாவில் தொழில்நுட்பங்களை தகுந்த முறையில் பயன்படுத்தியும், மாநில அரசின் சிறந்த நடவடிக்கைகளால் குற்றங்களை தடுக்கும் பணிகளிலும் சிறந்து விளங்கி தெலுங்கானா போலீசார் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.latest tamil newsஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது முதல் தற்போது வரை சிறந்த மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன்பத்துவதில் இருந்து ஹைடெக் சக்தியாக மாற்றுவது வரை குற்றங்களுக்கு எதிரான போரில் சிறப்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து செயல்பட்டு வருகிறது.
மாநிலத்தின்போலீஸ் நிலையங்களில் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் எழுது பொருட்களின் செலவுகள் (statonary expenses) மேற்கொள்ள பட்ஜெட் ஒதுக்கீட்டில் அதிகரிப்பது முதல் ரோந்து பணிகளை மேற்கொள்வதற்காகவும், ஸ்வாங்கி எஸ்யூவிகளை வழங்குவதன் மூலம், தெலுங்கானா போலீஸ் இப்போது நாட்டின் பல மாநிலங்களுக்கு அதன் தொழில்நுட்பத்திற்காக ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது.

மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை திறம்பட கையாள்வதற்காக போலீஸ் ஸ்டேஷன்களில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களுக்கான நடவடிக்கையை ஆய்வு செய்து வெவ்வேறு மாநில மூத்த போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும் 2014 அக்.,14 அன்று தெலுஙகானாவின் சைதராபாத் நகரில் பெண்கள் அணி அமைக்கப்பட்டு அதற்கான முயற்சிகளுக்கு பெண்களிடமிருந்தும் நல்ல கருத்துக்கள் வரவேற்கப்பட்டது. இதனையடுத்து பிற மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளும் பெண் போலீசாருக்கு சிறந்த பணிகளை வழங்குவது குறித்தும் முயற்சிகளை மேற்கொண்டனர்.


latest tamil newsநகரில் சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பாற்காக 'நேனு சைதம்' ( Nenu Saitham ) திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்தது. பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 90 சதவீதம் சி.சி.டி.வி காட்சிகளின் உதவியுடன் தீர்க்கப்பட்டன. இந்த கேமராக்கள் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டன. நாட்டின் மொத்தம் 4,27,529 கேமராக்களில், 2,75,528 கேமராக்கள் மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ளன என்று டேட்டா ஆன் போலீஸ் அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மண்டலங்களிலும் கேமராக்களை நிறுவுவதில் யாதத்ரி புவனகிரி மாவட்டம் முதலிடத்தில்உள்ளது.
மேலும் ரூ.350 கோடியில் பஞ்சாரா மலைபகுதிகளில் உயர்ந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை அமைப்பது முக்கியமான ஒன்றாகும். இந்த மையம் ஆக., மாதத்தில் திறக்கப் படலாம் என கூறப்பகிறது. தொழில்நுட்பங்களால் அங்கீகரிக்கப்பட்ட முக அடையாளத்தினை பயன்படுத்துவது (Facial Recognzation) மூலமாக காணாமல் போன பல நபர்களையும் அவர்களது குடும்பத்தாருடன் இணைக்கும் முயற்சிக்கும் உதவுகிறது.

வழக்குகளில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், அறியப்படாத உடல்களையும் அடையாளம் காண இந்த அமைப்பு இயக்கப்பட்டுள்ளது. அனைத்து வளங்களையும் தொழில்நுட்பத்தையும் அதிகபட்சமாகப் பயன்படுத்துவதன் மூலம், போலீஸ் பணியாளர்களின் நலனிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதிகமான போலிஸ் பணியாளர்களை நியமித்தல், வீட்டுக் காவலர்களின் ஊதிய உயர்வு, போக்குவரத்து காவல்துறையினருக்கான கொடுப்பனவை அதிகரித்தல் மற்றும் காவல் நிலையங்களின் எண்ணிக்கை 712 முதல் 815 வரை அதிகரித்தல் ஆகியவை கடந்த சில ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளாகும்.

மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்குவது குறித்த செயல்களிலும் சைபராபாத் போலீசார் சிறப்பாக செயல் பட்டனர். சைபராபாத் கமிஷனர் சஜ்ஜனாரின் செயல்பாடுக்கு பல மாநிலங்களை சேர்ந்தவர்களும் பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X