ஜப்பான் நகரில் நடந்து கொண்டே மொபைல் பயன்படுத்த தடை| Japan's Yamato aims to ban phone use while walking | Dinamalar

ஜப்பான் நகரில் நடந்து கொண்டே மொபைல் பயன்படுத்த தடை

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (1)
Share
Japan, mobile, Yamato city, ban, walking, ஜப்பான், மொபைல், தடை

டோக்கியோ: ஜப்பானில் யமடோ நகரில், நடந்து கொண்டே மொபைல் பயன்படுத்த தடை விதிக்க அந்நகர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஜப்பானில் நடந்து கொண்டே மொபைல் பயன்படுத்துவதால், விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டு அதிகரிப்பாலும் விபத்துகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


latest tamil news



இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள நகரான யமடோவில், நடந்து கொண்டே மொபைல் பயன்படுத்த தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா, அந்நகர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பாரப்ப்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X