பொது செய்தி

இந்தியா

கொரோனாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை: விரிவான வழிமுறை

Updated : ஜூன் 04, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
கொரோனாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை: விரிவான வழிமுறை

புதுடில்லி: கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில், உலக நாடுகள் போட்டி போட்டு வருகின்றன.ஆனால், 'மிக எளிமையான சுகாதார நடவடிக்கைகளுடன், சில குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்வதன் மூலம், வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்' என, மத்திய அரசின், 'ஆயுஷ்' அமைச்சகம் கூறியுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி, மருந்து தயாரிக்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு, அவரவருடைய நிலைக்கு ஏற்ப, சில மருந்துகள் அளிக்கப்படுகின்றன.


இயற்கை வைத்தியம்தற்போதைய நிலையில், 14 நாட்கள் தனிமையில் இருப்பது, முக கவசம் அணிந்திருப்பது, துாய்மையுடன் இருப்பது ஆகியவையே சிறந்த தடுப்பு மருந்தாகவும், சிகிச்சை முறையாகவும் உள்ளது.நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ, சுகாதார முறைகளான, ஆயுர்வேதம், யோகா, இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவை அடங்கிய, ஆயுஷ் அமைச்சகம் சார்பில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான விரிவான வழிமுறைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

நாடு முழுதும், பாரம்பரிய முறை சிகிச்சை அளிக்கும், ஏழு லட்சம் மருத்துவர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் ஒரு கையேட்டை வடிவமைத்துள்ளது. அதில், பல்வேறு பிரிவினருக்கு எவ்விதம் சிகிச்சை அளிக்க வேண்டும், எந்தெந்த மருந்துகளை அளிக்க வேண்டும் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது.இந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்றோரின் ஆலோசனைகளின்படி, இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


பாரம்பரிய சிகிச்சைஇது, சிகிச்சை அளிப்பதற்கான கையேடு என்றாலும், சாதாரண மக்களும் படித்து, அதன்படி நடந்து கொண்டால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும்.'நோய்நாடி, நோய்முதல் நாடி, அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' என்ற குறளுக்கு ஏற்ப, சிகிச்சை அளிப்பது தான், ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி போன்ற நம் பாரம்பரிய சிகிச்சை முறைகளின் அடிப்படை குணம்.அதற்கேற்ப, ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள கையேட்டில், நோய்த் தடுப்பு, நோய் நிர்வாகம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் என, வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளோர் மற்றும் பாதிக்கக் கூடிய வாய்ப்புள்ளோருக்கு சிகிச்சை அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது.

ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள கையேட்டில் கூறப்பட்டுள்ளதாவது:முதல் பிரிவில், வைரஸ் தொற்று உள்ளோர் அல்லது இல்லாதோர் மற்றும் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு, தனிமைப்படுத்துதல் மற்றும் வீட்டு தனிமைப்படுத்துதலின்போது அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து கூறப்

பட்டுள்ளது.இரண்டாவது பிரிவில், லேசாக அல்லது தீவிர அறிகுறிகள் உள்ளோர், மற்ற நோய்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளோருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து கூறப்பட்டுள்ளது.மூன்றாவதாக, வைரஸ் பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் உள்ள, கர்ப்பிணிகள், பாலுாட்டும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு அளிக்க வேண்டிய தடுப்பு மருத்துவம் குறித்து கூறப்பட்டு உள்ளது.அதற்கடுத்து, வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, அதில் இருந்து மீள்வதற்கும், மீண்டவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் அளிக்க வேண்டிய மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது.


வைரஸ் பரவாதுஇவ்வாறு ஒவ்வொரு பிரிவினருக்கும் அளிக்க வேண்டிய மருந்துகள் குறித்து கூறப்பட்டுள்ள நிலையில், பொதுவாக அனைத்து தரப்பினருக்கும், சில எளிய, சுலபமாக செய்ய வேண்டிய, கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.தற்போது, அனைவரும் பின்பற்றி வரும், சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முக கவசம் அணிவது, நிச்சயம் வைரஸ் பரவலைத் தடுக்கும். கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.மற்றவர்களை தொடுவது, பொது இடங்களில் துப்புவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், பெண்கள் குழந்தைகளுக்கு பாலுாட்டலாம். அதனால் வைரஸ் பரவாது.
இந்த அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவதுடன், உடலுக்கு தேவையான சத்துகளை தரும் ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஜீரணமாவதற்கு அதிக காலம் எடுக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.


துாங்க வேண்டும்தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், யோகா, பிராணாயாமம் போன்றவற்றை செய்வது, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.குறைந்தபட்சம், 7 - 8 மணி நேரம் துாங்க வேண்டும். பகல் நேரத்தில் துாங்குவதை தவிர்க்கவும். இரவில், சூரிய அஸ்தமனத்துக்கு, மூன்று மணி நேரத்துக்குள் அல்லது இரவு, 8:00 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும். சாப்பிட்ட, இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்குள் துாங்க வேண்டும்.இவ்வாறு, அந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
03-ஜூன்-202019:14:40 IST Report Abuse
Endrum Indian பாரம்பரிய மருந்து எது என்றால் மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியம். காலையில் துயில் எழுதல். ஒரு சிறு நடை பயிற்சி உடல் பயிற்சி செய்தல். குளித்தல் பூஜை செய்தல் (பத்மாசனம் -ஆசனம் -யோகா , மந்திரம் - தியானம் - மெடிடேஷன்) எளிமையான ஆகாரம் உண்ணுதல் அலுவலகம் அல்லது என்ன வேலை இருக்கின்றதோ அதிக செய்தல் மதியம் எளிய உணவு உண்ணுதல் இரவில் படுக்கும் நேரத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன் உணவு உண்டு முடித்துவிடல். இதை செய்தாலே போதும் நாம் செய்வது என்ன??காலி 8 மணிக்கு அவசர அவசரமாக எழுந்து உடனே காபி சாப்பிட்டு பேப்பர் படித்து அவசரஅவசரமாக குளித்து ஏதோ கொட்டிக்கொண்டு மதியம் முடிந்தால் பிஸ்ஸா பர்கேர் சாப்பிட்டு மாலை காபி குடித்து ஓய்வு நாள் என்றால் டாஸ்மாக் குடித்து ராத்திரி டிவியில் நள்ளிரவு காட்சியை கண்கொட்டாமல் பார்த்து???இப்படி இருந்தால் ஆரோக்கியம் எப்படி வரும்???
Rate this:
Cancel
03-ஜூன்-202007:58:37 IST Report Abuse
ஸ்ரீநிவாஸ்  வெங்கட் .பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தற்சார்பு அவசியம். மருத்துவத்துறை அதில் முக்கியமானது. அறுவை சிகிச்சை தேவைப்படுவதை தவிர்த்து இதர மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவமுறைகளை அறிமுகம் செய்யலாம். அதற்கு தரமான மருந்துகள், மருத்துவமனைகள் உருவாக்க அரசு முன்வர வேண்டும். அலோபதி மருத்துவத்திற்கு அரசு செய்யும் முதலீட்டில் 3ல் ஒரு பங்கு செலவு செய்தாலே, பாரம்பரிய முறைகள் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும். கடந்த சில ஆண்டுளில் தமிழகத்தில் 9 மருத்துவ கல்லுாரிகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதில் எத்தனை பாரம்பரிய மருத்துவக் கல்லுாரி என்று பார்ததாலே நாம் அவற்றை எந்த அளவிற்கு மதிக்கிறோம் என்பது தெரியும். இந்த முறையை மாற்ற அரசு முன்வர வேண்டும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
03-ஜூன்-202006:03:32 IST Report Abuse
RajanRajan ஆயுஷ் அமைச்சகம் நம் பாரம்பரிய மருத்துவத்தை அலோபதிக்கு இணையாக முன்னெடுக்க ஒரு நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது. எனவே நம் சித்த ஆயுர்வேதா மருத்துவர்கள் திறம்பட பங்காற்றி பாரம்பரிய வைத்தியத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X