அழுத குழந்தைக்கு பால் கொடுத்த நர்ஸ் ; குவியும் பாராட்டு

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement

கோல்கட்டா : கோல்கட்டாவில் பிறந்த குழந்தை பசியால் அழுதது. குழந்தையின் தாய் பால் கொடுக்க இயலாத நிலையில், நர்ஸ் ஒருவர் பால் கொடுத்து குழந்தையின் பசியை தீர்த்தார். இவரது மனிதாபிமானத்தை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.latest tamil newsமேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு அழகான குழந்தை பிறந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த பெண்ணால் தன் குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் திடீரென இரவு நேரத்தில் குழந்தை பசியால் அழுதது. பொதுவாக இதுபோன்ற நிலைமைகளில் அந்த வார்டில் உள்ள மற்ற சில தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுத்து பசியாற்றுவர். ஆனால் கொரோனா பாதிப்புகளால் அதையும் செய்யமுடியாது என தெரிவிக்கப்பட்டது.


latest tamil newsநேரம் ஆக ஆக குழந்தையின் அழுகுரல் அதிகரித்தது. இதனால் அந்த மருத்துவமனையில் பணியாற்றும் உமா என்ற நர்ஸ் அந்த குழந்தைக்கு பால் கொடுத்தார். அதனால் பசியாறிய குழந்தை அழுகையை நிறுத்தியது. குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது நர்சின் கணவர் போன் செய்துள்ளார். அப்போது குழந்தை குறித்த தகவலை கூறியபோது ,பாதுகாப்புடன் குழந்தையை பராமரித்துக்கொள்ளுமாறு அவர் கணவர் கூறியதாக தெரிவித்தார். மேலும் எல்லாவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தான் குழந்தைக்கு பால் கொடுப்பதாகவும், காலையில் வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் நர்ஸ் அவருக்கு பதிலளித்தார். செவிலியரின் இந்த செயல் அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களைப் பெற்றுவருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
04-ஜூன்-202011:42:04 IST Report Abuse
skv srinivasankrishnaveni அந்தக்காலத்தில் என் சித்தி (அம்மாவின் தங்கை) பிள்ளைபெற்று டைபாயது ஜுரம் வந்து இறந்துட்டார் அப்போது என் அம்மா தன் பிள்ளை யுடன் தங்கையின் பென்னையும் வளர்த்து ஆளாக்கினார் இந்த நர்ஸு செய்தது ரொம்பவே பெஸ்ட் செயல்
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
03-ஜூன்-202012:18:01 IST Report Abuse
Rafi இஸ்லாத்தில் பால்குடி பெண்களையும், தாயாக தான் ஏற்க வேண்டும், இந்த நர்ஸின் தாயுள்ளத்திற்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
03-ஜூன்-202018:05:09 IST Report Abuse
Endrum Indianஎந்த காரணத்தை கொண்டும் இஸ்லாம் என்று கூறாமல் மனிதத்தன்மை என்று கூறவும். மனிதாக மாறுங்கள்....
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
04-ஜூன்-202012:59:03 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுWhy you AH bring your religion here?...
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
03-ஜூன்-202007:52:46 IST Report Abuse
Bhaskaran உலகின் ஒப்புயர்வற்ற குணம் தாய்மை மட்டுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X