ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 82 பேருக்கு கொரோனா| 82 more Covid-19 cases in Andhra Pradesh, tally reaches 3,200 | Dinamalar

ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 82 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020
Share

அமராவதி : ஆந்திராவில் கொரோனா வைரசின் பாதிப்புகளால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. ஆந்திராவில் கொரோனா பாதிப்பு 3000 ஐ தாண்டி செல்கிறது. இது தொடர்பாக இன்று (ஜூன்.,02) அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்ததாவது : ஆந்திராவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் ( 9.00 am -9.00 am ) 82 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 3200 ஆக அதிகரித்தது. ஆந்திராவில் பலியானவர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகரித்து 64 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 450 பேர் குணமடைந்தனர். மாநிலத்தில் 927 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஆந்திராவை தவிர்த்து, பிற நாடுகளில் இருந்து திரும்பியவர்கள், மாநிலங்களில் இருந்து ஆந்திராவிற்குள் வந்தவர்கள் என மொத்தம் 112 பேரில் 479 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 12613 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப் பட்டது. மேலும் சில தினங்களுக்கு முன் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் உள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X