கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதம் தள்ளி வைக்க வழக்கு

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர், பக்தவத்சலம் தாக்கல் செய்த மனு: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுக்கான மாணவர்கள், தேர்வு மையத்துக்கான ஆசிரியர்கள் என, இந்த பொது தேர்வுக்கான பணியில், 22.43
Madras High Court, Madras HC, class 10 exam, students, examination, board exam, class 10, PIL, plea, High court, coronavirus, corona, covid-19, corona outbreak, covid-19 pandemic, corona updates, corona news

சென்னை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர், பக்தவத்சலம் தாக்கல் செய்த மனு: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுக்கான மாணவர்கள், தேர்வு மையத்துக்கான ஆசிரியர்கள் என, இந்த பொது தேர்வுக்கான பணியில், 22.43 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ள நேரத்தில், பாதுகாப்பாற்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்த தேர்வின் போது, எவ்வளவு எண்ணிக்கையில் சுகாதார பணியாளர்கள், போலீசார், வாகன ஓட்டுர்கள் பணியில் இருப்பர் என்பதை, அரசு தெரிவிக்கவில்லை.பொதுத் தேர்வு நடத்துவது குறித்து, ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசிக்க அரசு தவறி விட்டது.ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், ஆசிரியர்கள், மாணவர்கள் பெரும்பாலோர், சொந்த ஊர் சென்று விட்டனர். அவசரமாக வந்து, தேர்வு எழுதும் மனநிலையில், மாணவர்கள் இருக்க மாட்டார்கள். ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்களின் பாதுகாப்புக்கு, அரசு உரிய நடைமுறையை ஏற்படுத்தவில்லை.பொதுத்தேர்வு நடத்துவதாக அறிவித்திருப்பது, சமூக பரவலுக்கு அழைப்பு விடுத்தது போலாகிறது.

முறையான பரிசீலனை செய்யாமல், பொதுத்தேர்வு அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அரசின் அறிவிப்புக்கு, தடை விதிக்க வேண்டும். தேர்வு நடத்துவதற்கு முன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் ஆலோசிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இரண்டு மாதங்களுக்கு பின் அல்லது சுமுக நிலை திரும்பிய பின், மாணவர்களை தயார்படுத்தி, பொது தேர்வு நடத்த, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராமதாசன் - chennai,இந்தியா
03-ஜூன்-202021:01:39 IST Report Abuse
ராமதாசன் இவர்கள் அனைவரும் சுடலை & கோ'வின் அடிமைகள்.. எதற்கு எடுத்தாலும் கோர்ட் கேஸ் ..மாணவர்களின் படிப்பை கெடுப்பது இவர்கள் தான்.. அரசின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். எல்லோரையும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றால் அதற்க்கு ஒரு வருஷமாவது தேவை படும்..
Rate this:
Cancel
P Karthikeyan - Chennai,இந்தியா
03-ஜூன்-202009:21:31 IST Report Abuse
P Karthikeyan எதற்கு நீதிமன்றம் வழக்கு எல்லாம். பள்ளிகளை எல்லாம் மூடிவிட்டு மாணவர்களை டாஸ்மாக் கடையில் வேலைக்கு அனுப்புங்கள். தமிழ்நாடு விளங்கிடும். பள்ளிகளை திறப்பதை ஒத்திவைத்துவிட்டு டாஸ்மாக் கடைகளை திறப்பார்கள், மெகா சீரியல் படபிடிப்புக்கு அனுமதி கொடுப்பார்கள். எது தேவையோ அதை செய்வதில்லை. அரசு ஆசிரியர்களுக்கு இதுவரை ஊதியம் செல்கிறது அல்லவா. பிறகென்ன கவலை உங்களுக்கு. சி பி எஸ் சி பள்ளிகளில் காலாண்டு வரையிலான பாடங்களை இணைய வழியில் முடித்துவிட்டார்கள் .ஜூலை ஒன்று முதல் தேர்வுகளை நடத்த உள்ளார்கள். ஏற்கனவே தமிழக கல்வித்தரம் பற்றி சொல்ல வேண்டாம். நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லப்போகிறது நமக்கு தெரியாதா?
Rate this:
Cancel
03-ஜூன்-202005:54:33 IST Report Abuse
ஆப்பு எதுக்கு தள்ளிவெச்சு கஷ்டப் படணும். இருக்கவே இருக்கு ஆல் பாஸ் முறை. மாணவர்கள் ஏற்கனவே மன உளைச்சலில் இருக்காங்க.
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
03-ஜூன்-202018:27:19 IST Report Abuse
வாய்மையே வெல்லும்indha maadhiri ALL PASS senjaa.. kizhinjurum... appadiyae medical seat .. all pass... ivinga maruthuvam senjaa ellorum ilavasamaa yemanai paarkalaam...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X