பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதம் தள்ளி வைக்க வழக்கு| PILs filed in Madras High Court to postpone Class X exams | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதம் தள்ளி வைக்க வழக்கு

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (5)
Share
Madras High Court, Madras HC, class 10 exam, students, examination, board exam, class 10, PIL, plea, High court, coronavirus, corona, covid-19, corona outbreak, covid-19 pandemic, corona updates, corona news

சென்னை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர், பக்தவத்சலம் தாக்கல் செய்த மனு: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுக்கான மாணவர்கள், தேர்வு மையத்துக்கான ஆசிரியர்கள் என, இந்த பொது தேர்வுக்கான பணியில், 22.43 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ள நேரத்தில், பாதுகாப்பாற்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்த தேர்வின் போது, எவ்வளவு எண்ணிக்கையில் சுகாதார பணியாளர்கள், போலீசார், வாகன ஓட்டுர்கள் பணியில் இருப்பர் என்பதை, அரசு தெரிவிக்கவில்லை.பொதுத் தேர்வு நடத்துவது குறித்து, ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசிக்க அரசு தவறி விட்டது.ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், ஆசிரியர்கள், மாணவர்கள் பெரும்பாலோர், சொந்த ஊர் சென்று விட்டனர். அவசரமாக வந்து, தேர்வு எழுதும் மனநிலையில், மாணவர்கள் இருக்க மாட்டார்கள். ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்களின் பாதுகாப்புக்கு, அரசு உரிய நடைமுறையை ஏற்படுத்தவில்லை.பொதுத்தேர்வு நடத்துவதாக அறிவித்திருப்பது, சமூக பரவலுக்கு அழைப்பு விடுத்தது போலாகிறது.

முறையான பரிசீலனை செய்யாமல், பொதுத்தேர்வு அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அரசின் அறிவிப்புக்கு, தடை விதிக்க வேண்டும். தேர்வு நடத்துவதற்கு முன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் ஆலோசிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இரண்டு மாதங்களுக்கு பின் அல்லது சுமுக நிலை திரும்பிய பின், மாணவர்களை தயார்படுத்தி, பொது தேர்வு நடத்த, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X