எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தொற்றில் இருந்து மீள்கிறதா சென்னை?

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை, கொரோனா, கொரோனாவைரஸ்,

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரில், பாதிக்கும் மேற்பட்டோர் குணம்அடைந்துள்ளதால், தொற்றிலிருந்து சென்னை விரைவில் மீளும் என்ற, நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.

சென்னையில், 15 ஆயிரத்து, 770 பேர், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
எண்ணிக்கை அதிகரிப்பதால், அச்சமடைந்திருக்கும் சென்னை வாசிகளுக்கு, சற்றே ஆறுதல் தரும் விஷயமாக, பாதிக்கும் மேற்பட்டோர் குணமாகி உள்ளனர்.அதன்படி, ராயபுரம் மண்டலத்தில், தொற்று பாதித்த, 2,935 பேரில், 1,528 பேர் குணம் அடைந்துள்ளனர்; 1,377 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 30 பேர் உயிரிழந்துள்ளனர்.கோடம்பாக்கத்தில், 1,867ல், 1,177 பேர் குணமடைந்த நிலையில், 682 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு உயிரிழப்பு, எட்டாக உள்ளது.தண்டையார்பேட்டையில், 1,839ல், 723 பேர் குணமடைந்து, 1,101 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 15 பேர் இறந்துள்ளனர்.

தேனாம்பேட்டையில், 1,770ல், 895 பேர் குணமடைந்து, 858 பேர் சிகிச்சையில் உள்ளனர்; 17 பேர் உயிரிழந்துள்னர்.திரு.வி.க.நகரில், 1,651ல், 936 பேர் குணமாகி, 690 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், இதுவரை, 25 பேர் தொற்றால் பலியாகிஉள்ளனர்.அண்ணாநகரில், 1,341ல், 655 பேர் குணமடைந்தும், 671 பேர் சிகிச்சையிலும் உள்ளனர். இங்கு, உயிரிழப்பு, 15 ஆக உள்ளது.

சென்னை முழுதும், 15 ஆயிரத்து, 770 பேரில், 8,136 பேர் குணம் அடைந்துள்ளனர். இது, 52 சதவீதமாகும்.சென்னையை மிரட்டி வரும், ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில், தொற்றால் பாதித்தவர்களில், பாதிக்கும் மேல் குணமடைந்துள்ளதால், சென்னை விரைவில் தொற்றிலிருந்து மீளும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.தற்போது, 7,387 பேர் மட்டுமே, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். உயிரிழப்பு, 128 ஆக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
09-ஜூன்-202018:47:37 IST Report Abuse
Tamilnesan சென்னை மக்கள் தொகை பாதிக்கு மேல் காலியானாலும் டாஸ்மாக்கை மட்டும் அரசு மூடாது. அப்படி செய்தால், திமுக முதலாளிகளுக்கு சேதாரம் வந்து விடும்.
Rate this:
Cancel
Vetri Vel - chennai,இந்தியா
03-ஜூன்-202022:53:22 IST Report Abuse
Vetri Vel வீட்டுக்கு வீடு ஏறி ஆட்களை புடிச்சி பதினாலு நாள் அடைச்சு வச்சிக்கிட்டு கொரோனா விலிருந்து மீண்டு எழுந்தார் னு பொய் கணக்கு எழுதுகிறானுவோ... மோசடி கும்பலின் மனசாட்சி இல்லாத பொய் கணக்கு வெளியிடப்படுகிறது... மக்களே உசார்.. இது சென்னையில் நிதர்சனமான நிலவரம்..
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
03-ஜூன்-202018:29:02 IST Report Abuse
Tamilnesan அன்று எம்ஜியார் தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றலாம் என்று சொன்ன பொது, கேடு கெட்ட கட்டுமரம் கும்பல் எதிர்த்து பேசியது. இன்று அதன் பலனை சென்னை வாசிகள் அறுவடை செய்கிறார்கள்.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஜூன்-202021:10:13 IST Report Abuse
தல புராணம்அந்த ஆணியை கடந்த பத்து வருடங்களில் பிடுங்கியிருக்கலாமே?...
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஜூன்-202021:11:17 IST Report Abuse
தல புராணம்இவனுங்க அறிக்கையை பாத்தா காமெடி சேனல் பாக்குற மாதிரியே ஒரு ஃபீலிங்ஸ்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X