இன்று பிற்பகல் கரையை கடக்கிறது, 'நிசர்கா' புயல்

Added : ஜூன் 02, 2020
Share
Advertisement
 இன்று பிற்பகல் கரையை கடக்கிறது, 'நிசர்கா' புயல்

மும்பை : 'தென் மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள, 'நிசர்கா' புயல், இன்று பிற்பகல், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் இடையே கரையை கடக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1882ம் ஆண்டுக்கு பின், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையை, புயல் தாக்க உள்ளது. தென் மேற்கு பருவ மழை நேற்று முன்தினம் துவங்கியது. இந்நிலையில், தென் கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதி மற்றும் அதையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது புயலாக வலுப்பெற்று, வடக்கு, வட மேற்கு திசையில், 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. 'நிசர்கா' என, பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், இன்று பிற்பகல், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் இடையே, கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, மஹாராஷ்டிராவின் மும்பை, பால்கர், தானே, ராய்காட் ஆகிய பகுதிகளிலும், கோவா மற்றும் குஜராத் மாநிலங்களிலும், மணிக்கு, 115 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மும்பைக்கு, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில், நிசர்கா புயலை எதிர்கொள்ள, தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஏற்கனவே கொரோனா தொற்றால் நிலைகுலைந்துள்ள மும்பையை, இன்று புயல் தாக்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த, 1882ம் ஆண்டுக்குப் பின், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையை புயல் தாக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:புயலால் பாதிக்கப்பட உள்ள பகுதிகளில், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. மும்பையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும், குடிசைகளின் வசிக்கும் மக்களும், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புயலை எதிர்கொள்ள, அரசு இயந்திரங்கள் தயாராக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார் .

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில முதல்வர்களுடன், நேற்று பேசினார். அவர், 'டுவிட்டரில்' வெளியிட்ட பதிவில், 'இந்தியாவின் மேற்கு கடற்பகுதியில் உருவாகியுள்ள புயலால் ஏற்பட்டுள்ள நிலைமையை, அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஒவ்வொருவரும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுவோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X