பொது செய்தி

தமிழ்நாடு

சபாஷ்! பொருளாதாரத்தை மீட்டெடுக்கிறது தமிழகம்

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
மும்பை :கொரோனா பிரச்னையால் சீர்குலைந்துள்ள இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாக, தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, மார்ச், 24 இரவிலிருந்து நாடு தழுவிய பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள்
Tamil Nadu, Kerala, Karnataka, economy, Indian economy, lockdown, coronavirus, corona, covid-19, corona outbreak, corona update, corona news, covid-19 PANDEMIC, RECESSION, revive economy, business, Elara Securities Inc, study, research

மும்பை :கொரோனா பிரச்னையால் சீர்குலைந்துள்ள இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள்
முன்னணியில் உள்ளதாக, தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, மார்ச், 24 இரவிலிருந்து நாடு தழுவிய பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன; பஸ், ரயில், விமானப் போக்குவரத்தும் முடக்கப்பட்டது; ஆட்டோ, டாக்சி ஓடவில்லை.


'எல்ரா செக்யூரிட்டீஸ்'கட்டுமான தொழில்கள் பாதிக்கப்பட்டதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். பல தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கின. மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் பாதிக்கப்பட்டது. வருமானம் இல்லாததால், மக்களின் வாங்கும் சக்தி குறைந்து, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த மாத துவக்கத்திலிருந்து, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு மட்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மற்ற பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இயல்புநிலை திரும்பி வருகிறது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது.
வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில், பஸ் போக்குவரத்தும் துவங்கியுள்ளது. வரும், 8 முதல், மேலும் சில துறைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம், மும்பையை மையமாக வைத்து செயல்படும், 'எல்ரா செக்யூரிட்டீஸ்' என்ற ஆய்வு நிறுவனம், ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு குறித்து, நாடு தழுவிய அளவில் ஆய்வு நடத்தியது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்கள் குறித்து, அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவரும், பொருளாதார நிபுணருமான கரீமா கபூர் கூறியதாவது:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழகம், பஞ்சாப், கேரளா, ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பங்கு மட்டும், 27 சதவீதம். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில், இந்த ஐந்து மாநிலங்களும் முன்னணியில் உள்ளன. மின் நுகர்வு, போக்கு வரத்து, மொத்த விலை சந்தைக்கு விவசாய விளைபொருட்கள் வரத்து, 'கூகுள் மொபைல் டேட்டா' பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த தகவல் தெரிய வந்துள்ளது.


தேவைகள் அதிகரிப்புஅதே நேரத்தில், தொழில் வளர்ச்சி அதிகம் உள்ள மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் பின்தங்கியுள்ளன. வைரஸ் பரவல் அதிகரிப்பதால், இந்த மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாமல் இருப்பதே இதற்கு காரணம்.பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. விவசாயத் துறைக்கான தேவைகளும் அதிகரித்து உள்ளன.
நுகர்வோர், தங்கள் நுகர்வு கலாசாரத்தை, புதிய முறைக்கு மாற்ற முயற்சிப்பதும் தெரிய வந்துள்ளது. அடுத்த சில நாட்களில், சலுான், விமானப் போக்குவரத்து, இரு சக்கர வாகனம், வீடு சுத்தம் செய்யும் கருவி, 'ஏசி, வாஷிங் மெஷின்' ஆகிய வற்றுக்கான தேவை அதிகரிக்கும்.ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயத்தில், மருந்துகள், மளிகைப் பொருட்கள், கை சுத்தம் செய்யும் திரவம் ஆகியவற்றை, மக்கள் அடித்து பிடித்து வாங்கினர்; அது தற்போது குறைந்திருக்கிறது. தலையில் தேய்க்கும் எண்ணெய், லேப்டாப், மொபைல் போன், நகைகள், பொம்மை, 'மைக்ரோவேவ் ஓவன்' எனப்படும், உணவுப் பொருட்களை சூடாக வைத்திருக்கும் இயந்திரம் போன்ற பொருட்களையும் மக்கள் வாங்கி வருகின்றனர்.


முயற்சிவரும் மாதங்களிலும் இதற்கான தேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாடு முழுதும் பொருளாதார நடவடிக்கைகள் பரவலாக மேம்பட்டிருந்தாலும், இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டுமெனில், வர்த்தக நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
04-ஜூன்-202016:00:57 IST Report Abuse
Rafi குஜராத் மாடல் அதன் உண்மை நிலையை உணரும் காலத்தில் இருக்கின்றோம். தென் மாநிலங்கள் குறிப்பாக மக்கள் அறிவு திடனுடன் தான் திராவிட ஆட்சிகளை தேர்ந்தெடுத்து இருந்தார்கள் என்பதும் நன்றாக விளங்குகின்றது.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
03-ஜூன்-202020:24:08 IST Report Abuse
மதுரை விருமாண்டி தஞ்சாவூரில் கல்வெட்டு வேலைக்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள்.. கூட்டிக்கிட்டு வந்து பதிவு பண்ணுங்க.. பண்ணிட்டு தலைமாட்டில் வெச்சி படுங்க..
Rate this:
Cancel
AMAN - Male,மாலத்தீவு
03-ஜூன்-202014:53:11 IST Report Abuse
AMAN பொது மக்கள்கிட்ட இருந்து காசை புடுங்குறது பெயர்தான் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது? இப்போ கரண்ட் பில் மூலம் கோடி கோடியா தவறான மீட்டர் ரீடிங் பண்ணி பணத்தை புடுங்குற வேலை நடந்திட்டு இருக்கு. அதை பத்தி நீங்க செய்தி போட மாட்டீர்கள்.
Rate this:
m.viswanathan - chennai,இந்தியா
03-ஜூன்-202020:48:41 IST Report Abuse
m.viswanathanவிஞ்ஞான திருட்டில் இது ஒரு வகை , கணக்கு கேட்டால் தலை சுற்றுவது போல் ஒரு விளக்கம் கிடைக்கும் , பகல் கொள்ளை , எத்தனை கோடி வருமானமோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X