பொது செய்தி

தமிழ்நாடு

கடல்வழி சார் பயிற்சி நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறி

Updated : ஜூன் 02, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கடல்வழி சார் பயிற்சி நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறி

'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்பர். இந்தியக் கடல்வழி வரலாறு உலக கப்பல் போக்கு வரத்தில் மிகச் சிறந்த நற்பெயரைக் கொண்டது.இந்திய கப்பல் துறையினரின் துாய்மையான அர்ப்பணிப்பு உணர்வும் திறனுமே இந்த சாதனைக்கு முக்கிய காரணம். 1990 இறுதி வாக்கில் கடல்வழிசார் பயிற்சி அளிக்க தனியாருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்தியாவில் கடல்வழிசார் கல்வியை முறைப்படுத்தும் நிர்வாகமாக கப்பல் துறை பொது இயக்குனரகம் செயல்படுகிறது.

கப்பல் ஊழியர்களின் முறைப்படுத்தப்பட்ட பயிற்சி சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு தேவைகள் சரியாக இருக்கிறதா; தேர்ச்சி சான்றிதழ் வழங்கும் முன் கடல்வழிசார் பயிற்சியின் தரம் முறையாக பின்பற்றப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு இந்த இயக்குனரகத்திற்கு உள்ளது.
பல்வேறு தர தேர்ச்சி சான்றிதழ் பெறுவதற்கு முன் ஒவ்வொரு மாணவரும் இயக்குனரகம் நடத்தும் பல்வேறு எழுத்து மற்றும் வாய்மொழித் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
வணிக கப்பலில் பணியாற்றுவதற்குத் தேவையான பயிற்சியை மட்டுமே கடலுக்கு முந்தைய படிப்பாக கடல்வழிசார் பயிற்சி நிறுவனங்கள் வழங்குகின்றன.


அதிகார தொனி கூடாதுஎந்த துறையிலும் ஒருவருடைய வெற்றிக்கான திறனை நிர்ணயித்து சான்றிதழ் வழங்க ஒரு சட்டப்பூர்வ அமைப்பு இருப்பது வழக்கம்.கடல்வழிசார் துறையைப் பொறுத்தவரை பல்வேறு தர தேர்ச்சி சான்றிதழ் அல்லது தொழில் முறை லைசென்ஸ் ஆகியவற்றை கப்பல் துறை பொது இயக்குனரகம் கண்காணித்து வழங்க வேண்டும்.ஆனால் கடல் படிப்புக்கு முந்தைய படிப்பின் மூலம் மட்டுமே தொழில் ரீதியான தேர்ச்சி சான்றிதழை ஒருவர் பெற்று விட முடியாது. எனவே அத்தகைய படிப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலோ அவற்றை நசுக்கும் போக்கிலோ அதிகார தொனியுடன் ஆக்ரோஷமாக இயக்குனரகத்தின் கண்காணிப்பு இருந்துவிடக் கூடாது.
கப்பல் துறை பொது இயக்குனரகம் இதே அதிகார தொனியுடன் தொடர்ந்து செயல்பட்டால் கடல்வழிசார் பயிற்சியை முறைப்படுத்த அதற்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் உணர்வுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.இந்த போக்கு நீடித்தால் அந்த அதிகாரத்தை மறுபரிசீலனை செய்யும் வகையில் பார்லிமென்டில் சட்டம் கொண்டு வர நேரிடும்.


பரிசீலிக்க வேண்டிய அம்சங்கள்மேலும் ஒவ்வொரு முறையும் புதிய வழிமுறைகள் அல்லது சுற்றறிக்கைகளை கப்பல் துறை பொது இயக்குனரகம் வெளியிடும்போது கப்பல் ஊழியர்களின் முறைப்படுத்தப்பட்ட பயிற்சி சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு தேவைகளை மேற்கோள் காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளது.எனவே கப்பல் ஊழியர்களின் பயிற்சி சான்றிதழ் மற்றும் கண்காணிப்புத் தேவைகள் தொடர்பான கீழ்கண்ட அம்சங்களைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது.கப்பல் ஊழியர்களின் முறைப்படுத்தப்பட்ட பயிற்சி சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு தேவைகளின் நெறிமுறைகளை மேம்போக்காக பார்த்தாலே அங்கீகரிக்கப்பட்ட கல்வியை ஒரு மாணவர் முழுமை செய்தார் என்ற சான்றிதழே போதுமானது என்பது தெரிய வரும்.
மேலும் கடல்வழிசார் கல்விக்கான அடிப்படை அல்லது கடலுக்கு முந்தைய பட்டம் / டிப்ளமா படிப்புகளை கப்பல் துறை பொது இயக்குனரகம் மேற்பார்வை இடவோ அந்த கல்வி நிறுவனங்களை முறைப்படுத்தவோ அதிகாரம் பெற்றிருப்பதாக குறிப்பிட்டு கூறப்படவில்லை. இவற்றை கப்பல் ஊழியர்களின் முறைப்படுத்தப்பட்ட பயிற்சி சான்றிதழ் மற்றும் கண்காணிப்புத் தேவைகளின் நெறிமுறைகளின் 'சேப்டர்' 2 மற்றும் 3 தெளிவாக்குகிறது.

பயிற்சி சான்றிதழ் மற்றும் கப்பல் பணியாளர்கள் மீதான கண்காணிப்பு ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச தரத்தை நிர்ணயிப்பதே கப்பல் ஊழியர்களின் முறைப்படுத்தப்பட்ட பயிற்சி சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு தேவைகளின் நெறிமுறைகளின் நோக்கம்.

வணிகக் கப்பல் விதிமுறைகளும் கடல் பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் மதிப்பீட்டைப் பற்றிக் குறிப்பிடுகின்றனவே தவிர அங்கீகரிக்கப்பட்ட கடல்வழி பயிற்சி நிறுவனங்களில் பயிலும் பல்வேறு பட்டம் / டிப்ளமா மாணவர்களை பற்றிக் குறிப்பிடவில்லை.


கடல் பணியாளர்' என்பது யாரைக் குறிக்கிறதுகடல் பணியாளர் என்ற வார்த்தை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கமான பொருள் கொண்ட வார்த்தை. வணிகக் கப்பல் சட்டம் மற்றும் கப்பல் ஊழியர்களின் பயிற்சி சான்றிதழ் மற்றும் கண்காணிப்புத் தேவைகளின் நெறிமுறைகளில் 'கடல் பணியாளர்' என்பது 'கப்பலில் பயணிக்கும் ஒரு மாலுமி அல்லது கடல் பணியாளர்' என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர கடல்வழிசார் பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களைக் குறிக்கவில்லை.


கப்பல் துறை பொது இயக்குனரகம் கடல்வழிசார் பயிற்சி நிறுவனங்களின் பிரச்னைகள்:1. கப்பல் பணியாளர் துறையின் பங்குதாரர்களான கடல்வழிசார் பயிற்சி நிறுவனங்களின் கருத்துகளைக் கேட்காமலே கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அப்படியே கருத்துகளைக் கேட்டாலும் அது பெயரளவுக்கு ஒப்புக்கே செய்யப்படுகிறது

2. கடல்வழிசார் பயிற்சி நிறுவனங்கள் சார்பில் கொடுக்கப்பட்ட கருத்துகளை பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளாமல் அதன் சார்பில் தெரிவிக்கப்பட்ட ஒரு விஷயம் கூட நீக்கப்பட்டதில்லை; மாற்றம் செய்யப்பட்டதில்லை

3. புதிய வழிகாட்டுதல்களை அமல் செய்வதற்கு எவ்வித கால அவகாசமும் தரப்படுவதில்லை; அனைத்து வழிகாட்டுதல்களும் 'உடனடியாக செயல்பாட்டுக்கு' கொண்டு வரப்படுகின்றன

4. ஆண்டு முழுதும் மிகச் சாதாரணமாக மூச்சிரைக்கும் அவசரத்தில் புதிய கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. குறை காண்பதே வேலையாக உள்ளது

5. தற்போது இருக்கும் கடல்வழிசார் பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு கப்பல் துறை பொது இயக்குனரகமோ அதன் அதிகாரிகளோ எவ்வித முயற்சியும் மேற்கொள்வதில்லை.மாறாக குறைகளைக் கண்டுபிடிக்கும் செயல்களிலேயே ஈடுபட்டு வருகின்றனர். இது அவற்றை மூடுவதற்கான முயற்சியாகவே தோன்றுகிறது

6. கடல்வழிசார் பயிற்சி நிறுவனங்களை நிர்வகிப்பவர்கள் அனைவரையும் 'உங்களால் விதிமுறைகளுக்கு இணங்க செயல்பட முடியவில்லை என்றால் உங்கள் பயிற்சி நிறுவனங்களை மூடிவிட வேண்டியது தானே' என அவமதிக்கும் வகையில் கூறி கப்பல் துறை பொது இயக்குனரக அலுவலகத்திலிருந்தே வெளியேற்றி விட்டனர்

7. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா வலுவான கடல் பணியாளர்களை உருவாக்குவதில் கடல்வழிசார் பயிற்சி நிறுவனங்கள் ஆற்றி வரும் முக்கிய பங்களிப்பை மறந்து அவை லாப நோக்கில் செயல்பட்டு வருவதாக இழிவுபடுத்தும் வகையில் கப்பல் துறை பொது இயக்குனரக அதிகாரிகள் பகிரங்கமாக பேசி வருகின்றனர்தொடர்ந்து நடத்துவதே கேள்விக்குறியாக உள்ளது

8. எந்த ஒரு புதிய கட்டமைப்பையும் உருவாக்குவதென்றால் அதற்கு அதிக முதலீடு செய்ய வேண்டி வரும்; ஒரு நீண்ட கால படிப்பின்போது அதை மாணவர்களின் கட்டணம் மூலம் சரி செய்ய முடியாது.திடீரென புதிய விதிகளை அமல் செய்ய வேண்டுமென்றால் அதனால் ஏற்படும் கூடுதல் செலவை எதிர்கால மாணவர்கள் தலையில் தான் கட்ட வேண்டி வரும். மேலும் தனியார் நிர்வாகங்களைக் கடுமையான நிதி நெருக்கடியில் கொண்டு போய் விடும்.அப்படி இருக்கும்போது லாபம் என்ற கேள்விக்கே இடம் இல்லையே... இப்போதைய நிலையில் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற இலக்கே பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

9. கொள்கை விஷயங்களில் இந்திய கடல்வழிசார் பல்கலைக்கழகத்தை கப்பல் துறை பொது இயக்குனரகம் கலந்தாலோசிப்பது இல்லை; கணக்கில் கூட எடுத்துக் கொள்வது கிடையாது. இந்திய கடல்வழிசார் பல்கலைக்கழகத்தின் முக்கிய பொறுப்புகளில் முழு நேர அலுவலர்கள் இல்லாதது கப்பல் துறை பொது இயக்குனரகத்துக்கு வசதியாகி விட்டது

10. அதிகாரம் ஊழலுக்கு வழி வகுக்கிறது; முழுமையான அதிகாரம் ஊழலை மேலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் கடல்வழிசார் பயிற்சியில் கப்பல் துறை பொது இயக்குனரகத்திற்கு இருக்கும் முழுமையான அதிகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அறிவுப்பூர்வமாக விளக்கம் கொடுத்துள்ளது.அவசர கதியில் எடுக்கப்படும் முடிவுகள் நன்மைக்குப் பதில் அதிக தீமையையே தரும். எனவே கடல்வழிசார் பயிற்சி நிறுவனங்களின் நெருக்கடிகளைப் புரிந்து அவற்றின் மீது பரிதாபப்பட்டு நியாயமான நடைமுறை சாத்தியமான முடிவுகளை கப்பல் துறை பொது இயக்குனரகம் எடுக்க வேண்டிய தருணம் இது

11. கப்பல் கம்பெனிகள் நடத்தும் கடல்வழிசார் பயிற்சி நிறுவனங்களுக்கே தற்போதைய கப்பல் துறை பொது இயக்குனரகம் சாதகமாக செயல்படுகிறது என்ற எண்ணம் நிலவுகிறது


'இடையூறு' செய்வது தான் 'செயல்திறனா?'12. பல்கலைக்கழக மானியக்குழு, தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில் இணைப்பு, பல்கலைக்கழகங்கள் போன்ற முறைப்படுத்தும் அமைப்புகள் குறித்தும் கப்பல் துறை பொது இயக்குனரகத்துக்கு அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.
அதைப் பற்றி நாம் ஏதாவது சொல்ல நினைத்தாலும் அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களுடன் நம்மையே தொடர்பு கொள்ளச் சொல்கின்றனர். இந்த அமைப்புகள் அனைத்தையும் விட தாங்கள் மேலானவர்கள் என அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு இடையூறு செய்வதன் மூலமே கடல்வழிசார் பயிற்சியை நிர்வகிக்க முடியும் என்று கருதுகின்றனர். இவ்வாறு இடையூறு செய்வதை 'செயல்திறன்' என்று தவறாக எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது

13. கப்பல் துறை பொது இயக்குனரகத்திடம் முறையான, பிரபலமான, தகுதி நிர்வாக முறை எதுவும் இல்லை. சப்பைக்கட்டு கட்டுவதில் அது
சிறப்பாக செயல்படுகிறது. குறை தீர்க்கும் நடைமுறை எதுவும் செயல்பாட்டில் இல்லை. எவராவது புகார் கொடுத்தால் அவர் குறிவைத்து பழி வாங்கப்படுவார். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் இது ஒன்று தான், குறை தீர்க்கும் நடைமுறை என்று அவர்கள் நம்புகின்றனர்.


பகிரங்க மிரட்டல்14. ஒவ்வொரு கடல்வழிசார் பயிற்சி நிறுவனங்களின் மீதும் சில குறைபாடுகள் இருப்பதாகவும் எனவே எந்த நேரத்திலும் தாங்கள் விரும்பினால் அவற்றை மூடிவிட முடியும் எனவும்
கப்பல் துறை பொது இயக்குனரக அதிகாரிகள் பகிரங்கமாகவே பேசி வருகின்றனர்.இந்த நிறுவனங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் எந்த அளவுக்கு முயற்சியும் முதலீடும் செய்யப்பட்டுள்ளது; அதிலும் சில நிறுவனங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றன என்பதையெல்லாம் மறந்து கப்பல் துறை பொது இயக்குனரகத்தின் ஒரு சில அதிகாரிகளின் தயவில் கடல்வழிசார் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுவது போல் கூறுகின்றனர்

15. கப்பல் உலகத்திற்கு மும்பை மட்டுமே மையமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நிலவுகிறது; அதற்கான முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் தானோ என்னவோ பிற இடங்களில் உள்ள கடல்வழிசார் பயிற்சி நிறுவனங்களின் எந்த பிரச்னைகளையும் காது கொடுத்து கேட்பதே இல்லை. இது குறித்து விசாரணை தேவைப்
படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
03-ஜூன்-202008:12:40 IST Report Abuse
Srinivasan Rangarajan நம்ம K S அழகிரி அண்ணனுக்கு சொந்தமா ஒரு பயிற்சி நிறுவனம் இருப்பதாக கேள்வி. அப்போ அவர் வாழ்வு ஆதாரம் பாதிக்கப்படுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X