பொது செய்தி

தமிழ்நாடு

தொற்றின் உச்சம் வெகு தொலைவில் உள்ளது: ஐ.சி.எம்.ஆர்.,நம்பிக்கை

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 02, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
கொரோனா, வைரஸ், தொற்று, உச்சம், ஐ.சி.எம்.ஆர்., ICMR, COVID-19, CORONAVIRUS, COVID-19 PANDEMIC, CORONA, CORONA OUTBREAK, Indian Council of Medical Research, ICMR scientist, Dr Nivedita Gupta, new coronavirus cases, corona spread, covid-19 peak, corona in india, india fights corona

புதுடில்லி: ‛நாடு முழுவதும், ‛கொரோனா' பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், சமூக பரவலாகி, உச்ச நிலையை எட்டுவதில் இருந்து, நாம் வெகு தொலைவில் இருக்கிறோம்' என, மத்திய அரசு நேற்று தெரிவித்தது.

இது குறித்து, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வாளர், நிவேதிதா குப்தா கூறியதாவது:சமூக பரவல் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு பதில், வருங்காலத்தில் இந்த தொற்று, எவ்வளவு தீவிரமடையும் என்பதையும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நாம் எங்கு நிற்கிறோம் என்பதையும் அறிவது அவசியம்.

இதை மதிப்பிட, 34 ஆயிரம் பேரிடம், கருத்து கணிப்பு நடத்தியுள்ளோம். இதன் முடிவுகள், வரும் வாரங்களில், வெளியாகும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், தொற்றை கட்டுப்படுத்துவதில், நாம் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறோம். ‛பீக்' எனப்படும், தொற்றின் உச்ச நிலையை அடைவதில் இருந்து, நாம் மிக தொலைவில் உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

மத்திய சுகாதாரத்துறை இணை செயலர், லாவ் அகர்வால், செய்தியாளர்களிடம், நேற்று கூறியதாவது:உலக அளவில், கொரோனா பாதிப்பில், இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது என்று, பொதுவாக பார்ப்பதே தவறான கண்ணோட்டம். இந்த விஷயத்தில், நமது நாட்டின் மக்கள் தொகையையும், நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

உலக அளவில், இறப்பு விகிதம், 6.13 சதவீதமாக உள்ளது. இந்தியாவில், 2.82 சதவீதமாக உள்ளது. இது, சர்வதேச அளவில் ஒப்பிடுகையில், மிகக் குறைவு. நாம், சரியான நேரத்தில் தொற்றை கண்டறிவதும், முறையான சிகிச்சை அளிப்பதுமே, இறப்பு விகிதத்தை கட்டுக்குள் வைத்துள்ளது. உலக அளவில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் பேரில், 4.9 சதவீதம் பேர் இறக்கின்றனர். அதுவே, இந்தியாவில், 0.41 சதவீதமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
03-ஜூன்-202017:27:29 IST Report Abuse
Rajas மும்பையிலிருத்து டில்லி ICMR Head Quarters வந்த ICMR சயின்டிஸ்ட் ஒருவருக்கு கொரநா பாதிப்பு என்று தெரிய வந்து இவர்கள் அலுவலகமே அரண்டு போய் பலர் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று circular அனுப்பினார்கள்.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
03-ஜூன்-202016:53:54 IST Report Abuse
siriyaar Community spread in India means death of at least 1 crore people, but In other countries it is just unknown case tracked. Since India population is 135 crore and productivity is so high social spread also not big issue in India ICMR rubber stamp.
Rate this:
Cancel
sankaran vaidyanathan - Coimbatore,இந்தியா
03-ஜூன்-202010:22:20 IST Report Abuse
sankaran vaidyanathan கோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமி சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்கு சென்று அவற்றை கொரோனா வைரஸ் உற்பத்தி தொழிற்சாலைகளாக'' மாற்றும் காற்றில் உயிர்வாழும் நேரம் ஆடைகள், பொருட்கள் மீது மட்டும் படியாமல் காற்றிலும் கலக்கும் இந்தத் துகள்கள், காற்றில் மூன்று மணிநேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும். கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு வைரஸ்களும், முறையாக சுத்தம் செய்ய்யப்படாத உலோகங்கள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி ஆகியவற்றின் மீது ஒன்பது நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்று முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன. தாமிர உலோகத்தால் ஆன பொருட்களின் மேற்பரப்பில் நான்கு மணி நேரம் மட்டுமே இவை தாக்குப்பிடிக்கின்றன. தொற்று பரவியதற்கு எதிராக உங்கள் நோய் எதிர்ப்பாற்றலின் செயல்பாட்டால் ஏற்படக் கூடியவை. இந்த வைரஸ் ஊடுருவல் கிருமியாக இருக்கும். உடலின் மற்ற செல்கள், ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என உணர்ந்து சைட்டோகின்ஸ் என்ற ரசாயனத்தை உற்பத்தி செய்யும். இவை தான் நோய் எதிர்ப்பாற்றலாக செயல்படும். ஆனால் உடல் வலி, காய்ச்சலையும் ஏற்படுத்தும். வைரஸ் பாதிப்புக்கு எதிராக நோய்த் தடுப்பாற்றல் உக்கிரமாக செயல்படும்போது, இது நோயாக உருவாகும். நோய்த் தடுப்பாற்றல் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு, உடல் முழுக்க பாதிப்பை ஏற்படுத்துவது தான் பிரச்சினை. நோய்த் தடுப்பாற்றல் எதிர்வினை செயல்பாட்டில் சமநிலையற்ற தன்மையை இந்த வைரஸ் ஏற்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக உடல் அழற்சி இருக்கிறது. இதை எப்படி செய்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை'' என்று லண்டன் கிங்க்ஸ் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் நத்தாலி மேக்டெர்மோட் கூறியுள்ளார். நுரையீரல் அழற்சி, நிமோனியா வாயிலிருந்து, மூச்சுக் குழாய் வழியாகச் சென்று, நுரையீரலின் சிறிய குழல்களில் அதனால் செல்ல முடியும் என்றால், நுண்ணிய காற்று அறைகளில் அதனால் போய் அமர்ந்து கொள்ள முடியும். அங்கு தான் ரத்தத்திற்கு ஆக்சிஜன் செல்வதும், கரியமில வாயு நீக்கப்படுவதும் நடக்கிறது. ஆனால், நிமோனியாவில் இந்த அறைகளில் தண்ணீர் கோர்த்துக் கொண்டு, சுவாச இடைவெளி குறைந்து, சுவாசிப்பது சிரமம் ஆகும். நோய்த் தடுப்பாற்றல் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு, உடல் முழுக்க பாதிப்பை ஏற்படுத்துவது தான் பிரச்சினை. நாம் உடல் ஆரோக்கியத்துடன் சுருசுறுப்பாக இயங்க காலை மாலை நடை பயிற்சியை மேற்கொண்டாரகள் காற்றோட்டமான பூங்கா மரம் நிறைந்த சாலைகளில் . இதனைப் பற்றி விரிவான தகவல்கள் பிபிசி செய்தியில் போடப்பட்டுள்ளன . சூரிய வெளிச்சத்தைப் பொருத்து செயல்படும் வகையில் நமது உடல்கள் அமைந்துள்ளன. புற ஊதா கதிர்கள் நமது தோலில் படும்போது வைட்டமின் டி உற்பத்தி ஆவதை நல்ல உதாரணமாகக் கூறலாம். வைட்டமின் டி நமக்கு தினமும் கிடைப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் பலப்படுகின்றன. அது நமது நோய் எதிர்ப்பு செல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நமது நுரையீரல்களில் உள்ள பேருண்ணிகளுக்கு வைட்டமின் டி சக்தியைத் தருகிறது. இவை தான் சுவாச மண்டலத்தில் நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் முதல்வரிசை வீரர்களைப் போன்றவை. நுண்ணுயிர்களை எதிர்க்கக் கூடிய புரதத்தை உற்பத்தி செய்யும். வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை அது நேரடியாகத் தாக்கிக் கொன்றுவிடும். B மற்றும் T செல்கள் போன்ற மற்ற நோய் எதிர்ப்பு செல்களின் செயல்பாடுகளையும் அது ஊக்குவிக்கும். நீண்டகால நோய் எதிர்ப்பாற்றலுக்கு இவை காரணமாக இருக்கின்றன. வைட்டமின் டி குறைவாக உள்ளவர்களுக்கு, சளிக்காய்ச்சல் என்ற மூச்சுக் குழாய்ப் பாதையில் நோய்த் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால் கோவிட்-19 தொற்றுவதற்கான வாய்ப்புகள் குறையும் வனங்களில் சில நாட்களைக் கழித்தால், உடலில் இயல்பாக கிருமிகளைக் கொல்லும் செல்களின் எண்ணிக்கையும் செயல்பாடும் அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. பூங்காவில், மரங்கள் சூழ்ந்த காட்டில் அல்லது பசுமைவெளியில் உடற்பயிற்சி செய்தால், மிகவும் நல்லது. இயற்கைவெளியில் செல்வது, நகர்ப்புற பூங்காவாக இருந்தாலும் சரி - இருதயத் துடிப்பு வேகம், ரத்த அழுத்தம் குறையும், மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பு குறையும் என்பதை பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நீண்டகால அடிப்படையில் பார்த்தால், இயற்கை சூழலுக்கு நெருக்கமாக, இயற்கையுடன் இணைந்து வாழ்வது இருதயக் கோளாறுகளை, டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பைக் குறைக்கும், மரணத்தை தள்ளிப்போடும். வீட்டுக்கு வெளியில் செல்வது தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்தும். வீடுகளுக்குள் நாம் முடங்கி இருந்த நேரம், நமது உடல் இயக்க கடிகாரத்தின் செயல்பாட்டைப் பாதித்திருக்கும். இது 24 மணி நேர சுழற்சிக்கு ஏற்ப, தூக்கம் உள்ளிட்ட உயிரியல் இயக்க செயல்பாடுகளை கட்டுப்படுத்தி பழகியிருக்கிறது. நாம் வெளியில் செல்லும் போது வெளிச்சத்தின் தன்மை, நமது கண்களின் பின்புறத்தில் இருக்கும் ஒளி-உணர்வு செல்களில் பதிவதன் மூலம், உடல் இயக்க கடிகாரத்தின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப் படுகின்றன. கண்களின் பின்னால் உள்ள இந்த செல்கள் மூளையில், உடலின் மாஸ்டர் கடிகாரமாகச் செயல்படும் செல்களுடன் தொடர்பு கொள்கின்றன. வீட்டுக்குள் இருக்கும் வெளிச்சம் மிகவும் குறைவு என்பதால், இந்த செயல்பாடு தூண்டப்படாது. எனவே வாரம் முழுக்க ஒருவர் வெளியில் செல்லாமல் இருந்தால், இந்த ஒருங்கமைவுகளில் இடையூறுகள் ஏற்பட்டு, தூக்கத்தில் கோளாறுகள் ஏற்படும்'' கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த இயலவில்லை முடியாமல் இருக்கிறது என்றும் அதனால் HIV வியாதி யுடன் அவதி போடுவதுபோல இந்த நோய் உடன் வாழ பழகி கொள்ளுங்கள் என்கிறார்கள் . அனைவரும் வைட்டமின் டி எடுத்துக் கொள்வது நல்லது என்று கென்னி கூறுகிறார். பல நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில் நிறைய நேரத்தை வெளியில் செலவிட்டு அதிக வைட்டமின் டி பெற்றுக் கொள்வது வேறு பல நன்மைகளையும் கொண்டு வரும் என்றும் வலுவாகக் கூறப்படுகிறது ஏழை எளியோர் வறியவர் ஆதரவற்ற மக்கள் வசிக்கும் இடத்தை பார்வை இட்டு சுற்று சூழல் சுகாதாரத்தையும் தூய்மையையும் கண்காணித்து தொற்று நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை இல்லை . நோய் பரவுவதலை கட்டுப் படுத்த மாற்றி யோசிக்கவில்லை சமூக விலகலை கடை பிடியுங்கள் தனித்து இருங்கள் என்கிற நோக்கம் வெற்றி பெறாத பொழுது அதனையே திரும்ப சொல்வது சரியா ஊரடங்கினால் இந்திய பொருளாதாரம் சரிந்தது தொழிற் சாலைகள் இயங்கவில்லை இயந்திரங்கள் ஓடவில்லை இயல்பு வாழ்க்கை பறிபோனது உழைப்பாளிகள் வேலை இழந்தார்கள் இயற்கை தந்த ஆரோக்கியம் பெறுவது தடுக்கப்பட்டது ஏழை எளியோர் வறியவர் ஆதரவற்றோர் உழைப்பாளிகள் வாழ்வாதாரம் பறிபோனது பசி பட்டினி, பிணியால் உழல வேண்டி இருப்பது தான் இன்றய நிலை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X