பொது செய்தி

இந்தியா

இன்று பகல் கரையை கடக்கிறது 'நிசர்கா': 138 ஆண்டுக்கு பின் மும்பையை தாக்கும் புயல்

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Cyclone Nisarga, Mumbai, Maharashtra, cyclone, flood, heavy rainfall, climate, weather, IMD, Indian Meteorological Department, Mumbai, Gujarat, NDRF, Thane, PM Modi

மும்பை : 'தென் மேற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள 'நிசர்கா' புயல் இன்று பகல் மஹாராஷ்டிரா மற்றும் குஜாராத் இடையே கரையை கடக்கும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1882ம்
ஆண்டுக்கு பின் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையை புயல் தாக்க உள்ளது.தென் மேற்கு பருவமழை நேற்று முன்தினம் துவங்கியது. இந்தநிலையில் தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதி மற்றும் அதையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.இது புயலாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசையில் 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. 'நிசர்கா' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் இன்று பகல் மகாராஷ்டிரா
மற்றும் குஜாராத் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


latest tamil news
இதன் காரணமாக மஹாராஷ்டிராவின் மும்பை பால்கர் தானே ராய்காட் ஆகிய பகுதிகளிலும் கோவா மற்றும் குஜராத் மாநிலங்களிலும் மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.குறிப்பாக மும்பைக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் 'நிசர்கா' புயலை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கி விடப்படுள்ளது.
ஏற்கவே கொரோனா தொற்றால் நிலைகுலைந்துள்ள மும்பையை இன்று புயல் தாக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.கடந்த 1882ம் ஆண்டுக்குப் பின் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையை புயல் தாக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில முதல்வர்களுடன் நேற்று பேசினார்.அவர் 'டுவிட்டரில்' வெளியிட்ட பதிவில் 'இந்தியாவின் மேற்கு கடற்பகுதியில் உருவாகியுள்ள புயலால் ஏற்பட்டுள்ள நிலைமையை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
ஒவ்வொருவரும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுவோம்' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesan Mani - chennai,இந்தியா
04-ஜூன்-202003:50:29 IST Report Abuse
Ganesan Mani My advise to india I was affected by technology still I like to give chance world trust 130 crores brand india I trust world if word doesnt need us cut technology because of brand india name of acheived super power real fight and competition have ever think why China no1 population couldnot acheived the same of brand india had anybody thinks because Indians east ir West Indians are the best they are living all of ver the world their fathers and forefathers may belonged to india particilarly in cricket competitive should be there if in n boveder in Indian border any body do wrongs shoot at sight is my order no negotiation just shoot at sight .no need of third party interaction other country spies in india yas to be identified and ask them to look after the own business
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜூன்-202001:43:57 IST Report Abuse
Tamilan நூறாண்டுகளுக்கு மேற்பட்ட அழிவு வருவதால் அதை புனரமைக்க நிறைய பணம் தேவைப்படும் பொருளாதாரம் உயரும் என்று எண்ணித்தான் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏறிக்கொண்டே செல்கிறது . இப்படி ஒரு பொருளாதாரம் தேவைதானா ?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X