சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதையலுக்காக 13 வயது மகள் நரபலி: தந்தை உட்பட ஐந்து பேர் கைது

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதையல், நரபலி, தந்தை, மகள், கைது

புதுக்கோட்டை : 'புதையல் கிடைக்கும்' என்ற பெண் மந்திரவாதி பேச்சை நம்பி, 13 வயது மகளை, தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை அருகே, நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் பன்னீர்செல்வம், 55; மனைவி இந்திரா. இவர்களது மகள், வித்யா, 13.அங்குள்ள பள்ளியில், 8ம் படித்த வித்யா, மே, 18 காலை, குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றபோது, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். கந்தர்வக் கோட்டை போலீசார் விசாரித்து வந்தனர்.வித்யா, பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது உறுதியானது. சிறுமியின் தந்தை பன்னீர்செல்வம், முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளார். தீவிர விசாரணையில், மகளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

போலீசார் கூறியதாவது : பெண் மந்திரவாதி வசந்தி, 50, என்பவர், தன்னை நாடி வந்த பன்னீர் செல்வத்திடம், 'உன் மகளை நரபலி கொடுத்தால் உனக்கு நிறைய பணம் கிடைக்கும்; புதையல் கிடைக்கும்; செல்வம் பெருகும்' எனக் கூறி உள்ளார்.இதை நம்பிய பன்னீர்செல்வம், தண்ணீர் எடுக்கச் சென்ற மகளை, நண்பர் குமாருடன் சேர்ந்து, கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டார்.இதற்கு இன்னும் சிலர் உடந்தையாக இருந்துள்ளார். பன்னீர்செல்வம், வசந்தி, குமார் உட்பட ஐந்து பேரை கைது செய்து உள்ளோம். அவர்களிடம், விசாரணை நடக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்


.2வது மனைவி மர்மச் சாவு


பன்னீர்செல்வத்தின், இரண்டாவது மனைவி மூக்காயி, 40. இவர் வடுகவயலில், தன் தாய் வீட்டில் இருந்தார். மே 31ல், இவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.பன்னீர்செல்வம், மகளை கொன்றது அம்பலம் ஆகியுள்ளதால், தற்போது மூக்காயி சாவு குறித்தும், உடையாளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


7 மனைவியர்

கொத்தனாரான பன்னீர்செல்வம், கட்டடம் கட்டும் இடங்களில் எல்லாம், ஏதாவது ஒரு பெண்ணுடன் பழகி, அவரை மனைவி போல் வைத்துக் கொள்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளார். இதுவரை, ஏழு பெண்களை, ஆங்காங்கே குடியமர்த்தி, குடும்பம் நடத்தி வருவது, போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
04-ஜூன்-202013:51:27 IST Report Abuse
skv srinivasankrishnaveni எவண் சொன்னான் புதையல் கிட்டும் என்று முதாலா அவனை உசிரோடயேபிடிச்சு மூக்கிலே சாணியும் அடைச்சு கொள்ளவேண்டும் நாசமாபோக பிராடு சோசியணுக்களை எல்லாம் கழுவேற்றவேண்டும் நடக்குமா மோடி ரொம்பவே கருணையானவரா இருக்காரு இவனுகளுக்கெல்லாமா சதாம் ஹுசேன் போன்றவாதான் விடும் புத்திஇல்லாமல் வளத்தகுழந்தையாயி கோலா செய்தியே
Rate this:
Cancel
04-ஜூன்-202013:49:13 IST Report Abuse
Prasanna Krishnan kill this ...
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
04-ஜூன்-202011:43:31 IST Report Abuse
skv srinivasankrishnaveni அடப்பாவிகளா இவனுக்களையும் இவ்விதம்தான் கொன்னுபோடவேண்டும் மூதேவிகளை கழுவிலேயே ஏற்றவேண்டும்
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
04-ஜூன்-202014:07:23 IST Report Abuse
s.rajagopalanகழுவிலே ஏற்றவேண்டும்? தகுந்த தண்டனை தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X