அரசியல் செய்தி

தமிழ்நாடு

நோய் தொற்றை கட்டுப்படுத்த சிரமமாக உள்ளது: ஜெயகுமார்

Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
 நோய் தொற்றை கட்டுப்படுத்த சிரமமாக உள்ளது: ஜெயகுமார்

சென்னை : ''சென்னையில், ஒரு கோடிக்கும் மேலான மக்கள் தொகை இருப்பதால், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது, சிரமமாக உள்ளது. எனினும், தொற்றை கட்டுப்படுத்த, அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,” என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே, புதிதாக மீன்பிடி தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை, மீன் வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் நேற்று பார்வையிட்டார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள், 1,000 பேருக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.பின், ஜெயகுமார் அளித்த பேட்டி:காசிமேடு பகுதியில், மீனவர்கள் பாதுகாப்பை கையாள வேண்டும். அனைவரும் முகக் கவசம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

மீன் வியாபாரிகளும், பொதுமக்களும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில், மக்கள் தொகை அடிப்படையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.தளர்வுகள் இல்லையென்றால், மக்கள் பெரிய இன்னலுக்கு ஆளாக நேரிடும் என்பதால், குறிப்பிட்ட இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஒரு கோடிக்கும் மேலான மக்கள் தொகை இருப்பதால், நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது சிரமம். மேலும், நோய் தொற்று பரவாமல் இருக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
03-ஜூன்-202018:17:27 IST Report Abuse
Tamilnesan தன் கையாலாகாத்தனத்தை எப்படி மாற்றி மாற்றி கூறுகிறார் பாருங்கள்.
Rate this:
Cancel
யார்மனிதன் - Toronto,கனடா
03-ஜூன்-202017:13:21 IST Report Abuse
யார்மனிதன் மெயின் ரோட்டுக்கு வாங்களேன் பேசி ஒரு முடிவெடுப்போம்.. கட்டுப்படுத்த முடிலன்னு ஒரு அறிக்கை... பதவியை விட்டு இறங்கிக்கங்க
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
03-ஜூன்-202016:05:56 IST Report Abuse
dandy CONTROL MARKAM FIRSTDU FISSTDU ..THEN CORONA WILL VANISH ..HAVE YOU GOT BACKBONE ?????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X