பொது செய்தி

தமிழ்நாடு

முடி வெட்ட, 'ஆதார்' அவசியம்!

Added : ஜூன் 03, 2020
Share
Advertisement
முடி வெட்ட, 'ஆதார்' அவசியம்!

சென்னை, 'சலூன்கள், அழகு நிலையம் போன்றவற்றுக்கு வரும் வாடிக்கையாளர்களின், ஆதார் அடையாள விபரங்களை, பதிவேட்டில் குறித்து கொள்ள வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:அனைத்து பகுதிகளிலும் உள்ள, முடி திருத்தும் நிலையங்கள், சலூன்கள், அழகு நிலையங்கள், 'ஸ்பா' எனப்படும், ஆரோக்கிய நீரூற்று நிலையங்கள், சில நிபந்தனைகளுடன் செயல்பட, அரசு அனுமதித்துள்ளது. அவர்கள், சில நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

அதன் விபரம்:நுழைவு வாயிலில், சோப்பு மற்றும் தண்ணீரால், கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் அல்லது கைகளை சுத்தம் செய்வதற்கான சுத்திகரிப்பான் வைக்க வேண்டும்.வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, மொபைல் எண், 'ஆதார்' எண் போன்ற அடையாள விபரங்களை, ஒரு பதிவேடில் குறித்து கொள்ள வேண்டும்.
வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள், தங்கள் கைகளை துடைக்க, 'பேப்பர் நாப்கின்' வைக்க வேண்டும். அவை பயன்படுத்தப்பட்ட பின், பாதுகாப்பாக அகற்றுவதை, உறுதி செய்ய வேண்டும்.
அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களில் பணிபுரிவோர், உள்ளே நுழைவதற்கு முன்பும், வாடிக்கையாளருக்கு அழகூட்டும் பணியை துவங்கும் முன்னரும், சோப்பு, தண்ணீரால் கைகளை கழுவ வேண்டும்.அனைவரும் முகக் கவசம், கையுறை அணிய வேண்டும். அடிக்கடி தங்கள் மூக்கு, வாய், கண்களை தொடுவதை, தவிர்க்க வேண்டும்.

இருமல், சளி அல்லது காய்ச்சல் இருந்தால், பணியில் ஈடுபடக் கூடாது. அத்தகைய அறிகுறி உள்ள வாடிக்கையாளர்களும் வரக்கூடாது. அதிக வாடிக்கையாளர்கள் வருவதை தவிர்க்க, முன்பதிவு அடிப்படையில், வாடிக்கையாளர்களுக்கு அழகூட்டுதல் மற்றும் இதர சேவைகள் வழங்க வேண்டும்.
மொத்த இருக்கைகளில், 50 சதவீதத்திற்கு மேல், வாடிக்கையாளர்கள், ஒரே நேரத்தில் அமர்வதை தவிர்க்க, ஒரு நாற்காலி இடைவெளி விட்டு அமர வேண்டும்.'ஏசி' பயன்படுத்தக் கூடாது. வாடிக்கையாளருக்கு பயன்படுத்தும் உபகரணங்களை, உடனுக்குடன் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய, மேலங்கி பயன்படுத்த வேண்டும். மீண்டும் பயன்படுத்தக் கூடியதாக இருந்தால், சலவை செய்த பிறகே, மற்றொரு வாடிக்கையாளருக்கு பயன்
படுத்த வேண்டும்.இந்த அறிவுரைகளை, அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்கள் பின்பற்றுவதை, மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X