பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்கள் திறப்பு குறித்து அரசு இன்று ஆலோசனை

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Tamil Nadu, TN govt, religion, religious leaders, Tamil Nadu Chief Secretary, K Shanmugam,  COVID-19, coronavirus, corona, corona outbreak, lockdown, social distancing, temple, mosque, churches, TN news, pilgrims, covid-19 pandemic

சென்னை, தமிழகத்தில், கோவில்களை திறப்பது குறித்து, சமய தலைவர்களுடன், இன்று ஆலோசனை நடக்க உள்ள நிலையில், சில வேண்டுகோள்களை, பக்தர்கள் முன்வைத்துள்ளனர். ஊரடங்கால் வழிபாட்டு தலங்கள் அனைத்திலும், பக்தர்கள் தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டரை மாதங்களாக, பக்தர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். கோவிலை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் லட்சக்கணக்கான வியாபாரிகள், வாழ்வாதாரம் இழந்து, தவிக்கின்றனர்.


latest tamil newsஇந்நிலையில், வரும், 8ம் தேதி முதல், பத்தர்கள் தரிசனத்திற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில், இது தொடர்பாக, சமய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த, மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, சென்னை, தலைமைச் செயலகத்தில், இன்று நடக்கும் கூட்டத்தில், வழிபாட்டுத் தலங்களில், பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது குறித்தும், கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், ஆலோசிக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக, பக்தர்கள் கூறியதாவது:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், கோவில்களில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கலாம். கோவில்களில், சமூக விலகலை கடைப்பிடிப்பது, கட்டாயம் ஆக்கப்பட வேண்டும்.
தரிசன அனுமதிக்கு முன், சம்பந்தப்பட்ட கோவில்களில், அதற்கான வசதிகளை முன்கூட்டியே ஏற்படுத்த வேண்டும். ஆனால், 'ஆன்-லைன்' தரிசன திட்டம் வேண்டாம். அதை அனுமதித்தால், படிக்காதவர்களுக்கு சிரமம் ஏற்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
03-ஜூன்-202016:45:53 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI கோவில் முடியதால்தான் கொரோன இவ்வளவு பரவியுள்ளது , கோவில் .மசூதி . சர்ச் .திறந்து விடுங்க எல்லோரும் சேவிக்கட்டும் கொரோன பாதிப்பு இருக்காது
Rate this:
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
03-ஜூன்-202014:25:13 IST Report Abuse
A.Gomathinayagam கோவில்களில் கட்டணமில்லா தரிசனங்களை மட்டும் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கலாம் ,அர்ச்சனை ,தனிநபர் கட்டளை ,திருவிழாக்கள் ,நேர்த்திக்கடன் ,திருமணம் போன்றவற்றை தவிர்க்கலாம்
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
03-ஜூன்-202011:47:39 IST Report Abuse
Srinivas கோயிலில் கடவுள் சிலைகள் ஏதாவது இருக்கிறதா? சிலை திருட்டு விசாரணை அதிகாரி பொன் மாணிக்கவேல் ஓய்வுபெற்று பல மாதங்கள் ஆகிவிட்டது. அவருக்குப்பதில் சொன்னதைக் கேட்கும் ஒருவர் விசாரணை என்ற பெயருக்காக வந்துள்ளார். அநேகமாக அடிமைகளுக்கு எதிராக இருந்த சிலை திருட்டு வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும். மூன்று கல்லூரி மாணவிகளை பேருந்தில் உயிரோடு வைத்து எரித்த வழக்கில் அடிமைகளின் அடிமைகள் செய்த மாபெரும் தியாகத்திற்காக வெளியில் விடப்பட்டதுபோல் சிலை திருட்டு வழக்கு குற்றவாளிகளும் வெளியில் விடுபடுவர். பிரபலமான கோயில்களில் பாக்கியிருக்கும் இறைவன் ஐம்பொன் சிலைகளும் திருடப்பட்டு போலி சிலைகள் வைக்கப்படும். அம்மாஜி இருந்தபோதே பழனி முருகன் கோயிலில் இருந்த சிலையை அகற்றிவிட்டு போலி சிலையை வைத்தவர்கள் தான் இப்போது அதிகாரத்தில் உள்ளவர்கள். இவர்களின் சேவைதான் இந்துக்களுக்கு வேண்டும் என்று ஒரு கும்பல் கூவும். டாஸ்மாக்கை திறந்துவிட்டு நோய்த்தொற்றை அதிக அளவில் பரவச்செய்து அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட காரணமானவர்கள் தொண்டு ''மிகவும்'' சிறந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X