பொது செய்தி

தமிழ்நாடு

விமான பயணியர்களுக்கு தமிழக அரசு கிடுக்கிப்பிடி

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: 'தமிழகத்திற்குள் விமானத்தில் செல்லும் பயணியரை, ஏழு நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்' என, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.விமான பயணிகளுக்கான, வழிகாட்டி விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்திற்குள், விமானத்தில் பயணம் செய்யும், அனைவரது உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்படும். நோய் அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே, பயணம் செய்ய
Air Plane, travel, Tamil Nadu, SOP, chartered flights, Standard Operating Procedures, RT-PCR tests, COVID-19 negative certificates, tn NEWS, Tamil Nadu, institutional quarantine, விமான பயணியர்,தமிழக அரசு, கிடுக்கிப்பிடி

சென்னை: 'தமிழகத்திற்குள் விமானத்தில் செல்லும் பயணியரை, ஏழு நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்' என, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

விமான பயணிகளுக்கான, வழிகாட்டி விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்திற்குள், விமானத்தில் பயணம் செய்யும், அனைவரது உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்படும். நோய் அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே, பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

தமிழக அரசு இணையதளம் வழியே, 'இ -- பாஸ்' பெற்றவர்கள் மட்டுமே, விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவர். இரு தினங்களுக்கு முன் எடுக்கப்பட்ட, கொரோனா நோய் பரிசோதனை முடிவு, நெகட்டிவாக இருந்தால், அவருக்கு பரிசோதனை தேவையில்லை. அலுவல் ரீதியாக வெளியூர் சென்று விட்டு, 48 மணி நேரத்தில் திரும்புவோருக்கு, தனிமைப்படுத்துதல் தேவையில்லை. மற்றவர்கள், ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.


latest tamil newsதமிழகத்தில் இருந்து, பிற மாநிலங்களுக்கு செல்லும் பயணியர், வெப்பநிலை பரிசோதனைக்கு பின், விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படுவர். நோய் அறிகுறி இருந்தால், பயணம் செய்ய அனுமதி கிடையாது. பயணியர் எந்த மாநிலத்திற்கு செல்கின்றனரோ, அந்த மாநில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து வருவோர் அனைவருக்கும், கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்; ஏழு நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். நோய் தொற்று இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். நோய் தொற்று இல்லையென்றாலும், ஏழு நாட்களுக்கு பின், மறு பரிசோதனை நடத்த வேண்டும்.

அந்த சோதனையில், 'நெகட்டிவ்' என்றால், மீண்டும் ஏழு நாட்கள், வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும். அனைத்து பயணியர் கைகளிலும், தனிமைப்படுத்தப்படுவதற்கான முத்திரை குத்தப்படும்.இவ்வாறு, அரசு கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kundalakesi - Coimbatore,இந்தியா
03-ஜூன்-202007:04:57 IST Report Abuse
Kundalakesi I could see people with seal cleans it and roaming outside freely. What control this govt/people have. Better don't go out. S one person outside and keep them separately in a room.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
03-ஜூன்-202006:27:35 IST Report Abuse
மலரின் மகள் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறதா? வந்தே பாரத் மிசன் மூலம் எத்துணை விமனங்கள் தமிழகம் வருகின்றன? கொச்சி கோழிக்கோடு கண்ணூர் விமனன நிலையங்களுக்கு தொடர்ந்து தினமும் வந்த வண்ணம் இருந்து கொண்டே இருக்கின்றன. சென்னை இல்லையென்றால், மதுரை திருச்சி கோவை பன்னாட்டு விமானங்களை வந்தே பரத் மிஷன் விமானங்களை இயக்க முயற்சி செய்திருக்கலாம் அல்லவா? velnaattu வாழ் தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கு ஆவண செய்வதற்கும் அனைத்து அரசு துறையுடனும் இணைந்து உதவி செய்வதற்கு என்று பிரத்யேக வலை தளம் உருவாக்கி தகவல் பெற்று அதன் பிறகு? மத்திய அரசின் சார்பில் சில கப்பல்கள் மூலம் தாயகம் திரும்புவதற்கு உதவிகள் செய்திருக்கிறார்கள். சிங்கப்பூர் மலைசியா விலிருந்து எதோ எப்போதோ விமானங்களில் சிலர் திருப்பியிருக்கிறார்கள் மற்றபடி பலர் கோரிய மலேசியா சிங்கப்பூர் போர் திரும்பி சென்று அங்கு வேலையை தொடர செய்திருக்கிறார்கள். அதுவும் கேரளத்து வழியாக என்று தெரிகிறது. அரசு செய்யவேண்டியது நிறைய இருக்கிறது. செய்யவேண்டும் இத்தருணத்தில்.
Rate this:
THAMIRAMUM PAYANPADUM - india,இந்தியா
03-ஜூன்-202007:50:53 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM mukkiya kadamai silai vaipathu ninaividam vaipathu...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X