பொது செய்தி

இந்தியா

'ரபேல்' போர் விமானம்: பிரான்ஸ் அமைச்சர் உறுதி

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: 'கொரோனா பரவலால், 'ரபேல்' போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதில் எந்த காலதாமதமும் ஏற்படாது' என, பிரான்ஸ் ராணுவ அமைச்சர் பிளோரன்ஸ் பார்லி உறுதிஅளித்துள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரான்சின் ராணுவ அமைச்சர் பார்லியுடன், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று முன்தினம் டெலிபோனில் பேசினார். இது பற்றி, ராணுவ அமைச்சக வட்டாரங்கள்

புதுடில்லி: 'கொரோனா பரவலால், 'ரபேல்' போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதில் எந்த காலதாமதமும் ஏற்படாது' என, பிரான்ஸ் ராணுவ அமைச்சர் பிளோரன்ஸ் பார்லி உறுதிஅளித்துள்ளார்.latest tamil newsஐரோப்பிய நாடான, பிரான்சின் ராணுவ அமைச்சர் பார்லியுடன், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று முன்தினம் டெலிபோனில் பேசினார். இது பற்றி, ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:பிரான்சிடமிருந்து ரபேல் போர் விமானங்களை, இந்தியா கொள்முதல் செய்ய உள்ளது. கொரோனா பரவலால், உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இந்தியாவுக்கு ரபேல் போர் விமானங்கள் திட்டமிட்டபடி வழங்கப்படும்; இதில், எந்த காலதாமதமும் ஏற்படாது என, ராஜ்நாத் சிங்கிடம், பார்லி உறுதியளித்தார்.


latest tamil newsஅக்டோபர் மாதத்தில், முதல் ரபேல் விமானம், இந்தியா வந்தடையும் என, அவர் தெரிவித்தார். இரு தரப்பு ராணுவ உறவுகளை பலப்படுத்த, இருவரும் சம்மதம் தெரிவித்தனர். இந்திய பெருங்கடல் பகுதியில், இரு நாடுகளும் இணைந்து, ராணுவ பயிற்சியில் ஈடுபட, அமைச்சர்கள் இருவரும் ஒப்புக் கொண்டனர். இவ்வாறு, ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
03-ஜூன்-202012:18:56 IST Report Abuse
Raman Muthuswamy அன்பர் ராஜ-ராஜன் அவர்களே :: கேரளாக்காரர்கள் எல்லாவற்றிலும் முன்னோடிகள் .. அதன் பிரகாரம் நீங்கள் முன்கூட்டியே வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளீர்கள் .. சற்று பொறுங்கள் .. விமானம் வரட்டும் .. அவற்றின் திரnகளை பாப்போம் ..
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
03-ஜூன்-202006:52:34 IST Report Abuse
மலரின் மகள் போர் தளவாடங்கள் மற்றும் அதி நவீன யுத்த கருவிகள் வான் நிலம் நீர் வழி மற்றும் அனைத்திலும் செயல்படும் அதீ நவீன அதி வேக சிறப்பான கருவிகள் நிறைய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உன்னதமான பயிற்சி அளிக்கப்படவேண்டும். சில யுத்தங்கள் நிச்சயம் செய்து வெற்றி பெற்று நமது திறனை உலகிற்கு பறை சாற்றை வேண்டும். இஸ்ரேல் தேசத்தின் மீது பல அரசுகள் இணைந்து எதிர்த்து தோல்வி அடைந்ததில் இருந்து அவர்கள் மீது ஒரு அச்ச உணர்வு மரியாதை வந்து எதிர் செய்வோர் அமைதியாக மாறிவிட்டார்கள். நம்முடைய ராணுவ பலம் வீரம் பறை சாற்றை பட்டால் தான் அண்டை நாடுகள் அடங்கி கிடைக்கும். இழந்த விட்ட நிலங்கள் மீண்டும் இந்தியாவுடன் இணைக்கப்படவேண்டும். இந்தியா என்ற தேசம் சிந்து நதி சிந்து சமவெளி என்பதிலிருந்து வந்தது என்கிறது வரலாறு. அந்த சமவெளி மற்றும் நதி பாயும் நிலம் முழுதும் நம்மிடம் இணைந்து இருந்தால் தான் பெயர் காரணம் நிறைவு பெறும். அதை செய்வதற்கு ராணுவ பலம் மிக முக்கியம். காந்தீய வழியில் வெற்றி பெற்றதை விட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வழியில் நாம் வெற்றி பெற்றிருந்தால் எப்படி இருந்திருக்கும். வீரமான தேசம் என்று உலகம் அஞ்சி கொண்டிருக்குமல்லவா? அமைதியான மூவர்ண உடை அணிந்து அசோகா தர்ம சக்கரம் தாங்கி இருக்கும் நமது பாரத அன்னை கொடூரமான அதி பயங்கரி மாகாளி உருவமும் தாங்க வேண்டும். ராணுவ கல்வி அனைத்து பாட திட்டங்களிலும் வேண்டும். புலிக்கொடி அந்நிய தேசமெல்லாம் கடல் கடந்து பறந்து கொண்டிருந்த காலத்தினால் தான் சோலா சாம்ராஜ்யம் தமிழகத்தில் அமைதி பூங்காவாக இருந்தது என்பதை மனதில் இருத்தி நமது கல்வி திட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்தியன் சப் கான்டினென்ட என்பதை விட இந்தியன் கான்டினென்ட என்று வளரவேண்டும். நிச்சயம் நடக்கும். ஜைஹிந்த்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
03-ஜூன்-202005:46:57 IST Report Abuse
RajanRajan பப்புவை பில்ட் அவுட் பண்ணின ரபேல் இந்திய மண்ணை தரிசிக்க போகிறது. தேசம் வெற்றிகள் பல குவிக்க வாழ்த்துவோமாக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X