ஜூலை முதல் நேரடி விசாரணை: வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: 'நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணையை, ஜூலையில் துவக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுக்கு, வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.



latest tamil news



ஊரடங்கு அமலால், மார்ச் 25 முதல், நீதிமன்றங்களில் விசாரணை நடைபெறவில்லை. முக்கிய வழக்குகள் உள்ளிட்டவை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், உச்ச நீதிமன்ற, 'அட்வகேட்ஸ் ஆன் ரிகார்ட்ஸ்' சங்கத்தின் சார்பில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


latest tamil news



அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்படும் விசாரணையில், தங்களுடைய தரப்பை முழுமையாக தெரிவிக்க முடியவில்லை என்று, வழக்கறிஞர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்குகள் விசாரணை தற்போது குறைந்துள்ளதால், வழக்கறிஞர்களுக்கு வருவாய் குறைந்துள்ளது. தற்போது ஊடரங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதனால், கோடை விடுமுறைக்குப் பின், ஜூலையில் இருந்து, வழக்குகளை, நீதிமன்ற அறைகளிலேயே நேரடியாக விசாரிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
03-ஜூன்-202019:49:20 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN எல்லாம் வருவாயை நோக்கமாகக்கொண்டுதான் . நாட்ல சங்கங்கள் என்ற போர்வையில் ஆட்சி செய்ய நினைப்பது கூடிக்கொண்டே போகிறது. சங்கங்களுக்கு சரியான கிடுக்குபிடி போடனும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X