ஜூலை முதல் நேரடி விசாரணை: வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை| Lawyers' body urges CJI to resume physical hearings from July | Dinamalar

ஜூலை முதல் நேரடி விசாரணை: வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி: 'நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணையை, ஜூலையில் துவக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுக்கு, வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.ஊரடங்கு அமலால், மார்ச் 25 முதல், நீதிமன்றங்களில் விசாரணை நடைபெறவில்லை. முக்கிய வழக்குகள் உள்ளிட்டவை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், உச்ச

புதுடில்லி: 'நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணையை, ஜூலையில் துவக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுக்கு, வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.latest tamil newsஊரடங்கு அமலால், மார்ச் 25 முதல், நீதிமன்றங்களில் விசாரணை நடைபெறவில்லை. முக்கிய வழக்குகள் உள்ளிட்டவை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், உச்ச நீதிமன்ற, 'அட்வகேட்ஸ் ஆன் ரிகார்ட்ஸ்' சங்கத்தின் சார்பில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


latest tamil newsஅதில் கூறப்பட்டுஉள்ளதாவது:வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்படும் விசாரணையில், தங்களுடைய தரப்பை முழுமையாக தெரிவிக்க முடியவில்லை என்று, வழக்கறிஞர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்குகள் விசாரணை தற்போது குறைந்துள்ளதால், வழக்கறிஞர்களுக்கு வருவாய் குறைந்துள்ளது. தற்போது ஊடரங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதனால், கோடை விடுமுறைக்குப் பின், ஜூலையில் இருந்து, வழக்குகளை, நீதிமன்ற அறைகளிலேயே நேரடியாக விசாரிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X