பொது செய்தி

இந்தியா

வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கு அனுமதி; இந்திய விஞ்ஞானிகள் வரவேற்பு

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா நோயாளிகளுக்கு, 'அவிபவிர்' என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்து அளிக்க, ரஷ்யா ஒப்புதல் தந்திருப்பது, இது போன்ற மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ள இந்தியாவுக்கு சாதகமானது என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, விஞ்ஞானிகள், அருப் குமார் பானர்ஜி, உபாசனா ராய் ஆகியோர் கூறியதாவது: இந்தியாவில், கிளன்மார்க்
coronaupdate,covid19India,Indiafightscorona,coronaviruscrisis,coronavirusupdate,lockdown,quarantine,curfew,india,coronavirus,covid19, Russia, Indian scientists, Avifavir, Ministry of Health, Russian Federation,  anti-flu drug, Covid-19 treatment

புதுடில்லி : கொரோனா நோயாளிகளுக்கு, 'அவிபவிர்' என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்து அளிக்க, ரஷ்யா ஒப்புதல் தந்திருப்பது, இது போன்ற மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ள இந்தியாவுக்கு சாதகமானது என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, விஞ்ஞானிகள், அருப் குமார் பானர்ஜி, உபாசனா ராய் ஆகியோர் கூறியதாவது: இந்தியாவில், கிளன்மார்க் பார்மாசூடிக்கல்ஸ் நிறுவனம், 'பவிபிரவிர்' என்ற மருந்தை, கொரோனா நோயாளிகளுக்கு அளித்து பரிசோதித்து வருகிறது. இதில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முடிவு தெரியவரும்.

இந்நிலையில், இந்த மருந்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட, 'அவிபவிர்' மருந்தை பரிசோதித்ததில், கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலன்அளிக்கத் துவங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இது, நுரையீரலில், கொரோனா வைரஸ் பன்மடங்காக பெருக உதவும் புரதத்தை அழிக்கிறது. இதனால், நோய் பாதிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக இந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு வழங்க, ரஷ்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, நடப்பு மாதம், 60 ஆயிரம் சொட்டு மருந்து தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இந்த மருந்தின் வெற்றி, இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில், கிளன்மார்க் பரிசோதித்து வரும் பவிபிரவிர் மருந்து தான், அவிபவிர் தயாரிப்புக்கு உதவுகிறது. அதனால், இந்த மருந்தின் பரிசோதனை முடிவுகள் சாதகமாக வந்தால், இந்தியாவில் கொரோனா பாதிப்பை வெகுவாக கட்டுப்படுத்தி விடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
03-ஜூன்-202013:29:02 IST Report Abuse
Krishna Vaccines & Drugs will come after Corona Disease is Over
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
03-ஜூன்-202010:52:51 IST Report Abuse
வாய்மையே வெல்லும் ஆட்டு மந்தைகள்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஜூன்-202008:37:15 IST Report Abuse
தல புராணம் இந்திய விஞ்ஞானிகளா ?
Rate this:
P Karthikeyan - Chennai,இந்தியா
03-ஜூன்-202009:13:02 IST Report Abuse
P KarthikeyanFirst keep faith on your country then only you can identify scientists and experts. Tamilians never, ever had so far faith on their country. They have faith only on TASMAC and fake politicians. Indian scientists are world renowned experts....
Rate this:
Arumugam Arulkumar - Kangayam,இந்தியா
03-ஜூன்-202014:34:40 IST Report Abuse
Arumugam Arulkumarabsolutely right bro...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X