கொரோனா தகவலை தாமதமாக தந்ததா சீனா?

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
ஜெனீவா: கொரோனா வைரஸ் வைரஸ் பற்றிய முழுமை யான தகவல்களை, உலக சுகாதார நிறுவனத்துக்கு, சீனா, தாமதமாகவே தந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.கொரோனா வைரஸ், முதல் முதலாக, நம் அண்டை நாடான சீனாவில் தான் உருவானது; பின், ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் பரவியது. தற்போது நம் நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில், சீனா மீது, அமெரிக்கா கடும்

ஜெனீவா: கொரோனா வைரஸ் வைரஸ் பற்றிய முழுமை யான தகவல்களை, உலக சுகாதார நிறுவனத்துக்கு, சீனா, தாமதமாகவே தந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.latest tamil news


கொரோனா வைரஸ், முதல் முதலாக, நம் அண்டை நாடான சீனாவில் தான் உருவானது; பின், ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் பரவியது. தற்போது நம் நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில், சீனா மீது, அமெரிக்கா கடும் அதிருப்தி தெரிவித்தது.'கொரோனா வைரசை, சீனா, திட்டமிட்டே மற்ற நாடுகளுக்கு பரப்பியது. வைரசின் வீரியம் குறித்த தகவல்களை முன் கூட்டியே தெரிவிக்காமல் மறைத்து விட்டது' என, அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால், உலக சுகாதார நிறுவனம், சீனாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.

இதையடுத்து, உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வந்த நிதி உதவியை, அமெரிக்கா நிறுத்தி விட்டது. சுகாதார அமைப்புடனான உறவையும் துண்டிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. வீரியம் அதிகரிப்புஇந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த செய்தி நிறுவனம், இது தொடர்பான பல்வேறு தகவல்களை சேகரித்து, பல அதிகாரிகளை பேட்டி எடுத்து, முக்கிய தகவலை வெளியிட்டுஉள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:டிசம்பரிலேயே சீனாவில் கொரோனா வைரஸ் பரவி விட்டது. ஜன., 2ல், இதன் வீரியம் அதிகரிக்க துவங்கியது.

ஆனால், உலக சுகாதார நிறுவனத்துக்கு கொரோனா வைரஸ் எப்படி உருவானது, எப்படி பரவுகிறது, அதன் விளைவுகள் என்ன என்பது போன்ற எந்த விஷயத்தையும், சீனா, உடனடியாக தெரிவிக்கவில்லை. இதுபற்றிய அனைத்து விஷயங்களையும் ஆய்வகத்தில் முழுமையாக ஆய்வு செய்து முடித்து, சீனாவிலுள்ள வைரஸ் ஆராய்ச்சி மைய இணையதளத்தில் அதை வெளியிட்ட பின்பே, உலக சுகாதார அமைப்புக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.செய்தி நிறுவனம்அப்போது கூட கொரோனாவை பற்றிய முழுமையான தகவலை தெரிவிக்கவில்லை.


latest tamil newsஅதற்கு பின் இரண்டு வாரங்கள் கழித்துத் தான், முழுமையான தகவல்கள் தெரிவிக்கப் பட்டன. அதற்கு பின் தான், அதாவது, ஜன., 30ல், உலக அவசர நிலையை, சுகாதார நிறுவனம் அறிவித்தது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள உலக சுகாதார நிறுவன அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் எடுத்த பேட்டி, ஆவணங்கள், 'இ - மெயில்' தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த தகவலை, அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
03-ஜூன்-202015:45:25 IST Report Abuse
Anbuselvan ஜனவரி பதினொன்றாம் தேதி வரை இந்த வைரஸ் ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு பரவாது என WHO வுக்கு சொன்னவர்கள்தானே இவர்கள். நவம்பரில் வந்த நோய் பரவாது என்று இவர்கள் சொல்லியதை WHO தனது வலை பக்கத்தில் போட்டு இருப்பது தான் இதற்கு ஆதாரம். இதற்கு மேல் என்ன வேண்டும்?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
03-ஜூன்-202013:18:47 IST Report Abuse
Ramesh Sargam தகவல் சீனா தாமதமாக தந்ததா? இதை பற்றி 'ஆராய்ச்சி செய்வதையும், பேசுவதையும்' விட்டுவிட்டு, வைரஸை பரப்பிய சீனாவின் மீது எந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பேசி ஒரு முடிவு எடுப்பது சிறந்தது.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
03-ஜூன்-202013:13:19 IST Report Abuse
Krishna World & People, Must Unite For Actions Against Extreme Communism (now China), Extreme Islamists (almost all since they Never Respect-Use But Destroy Native language-culture-religion-People even in Arabia), White Supremacists (few-USA etc),
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X