உணவு வழங்கிய ஷமி; பி.சி.சி.ஐ., பாராட்டு| Shami distributes food & masks to migrants, BCCI hails the effort | Dinamalar

உணவு வழங்கிய ஷமி; பி.சி.சி.ஐ., பாராட்டு

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (4) | |
அமரோகா : புலம் பெயர்ந்த மக்களுக்கு, இந்திய கிரிக்கெட் அணி வீரர், முகமது ஷமி, உணவு மற்றும் 'மாஸ்க்' வழங்கினார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உள்ளது. இதனால் அவதிப்பட்ட புலம்பெயர்ந்த மக்கள், தங்களது மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். உ.பி.,யின் சஹாஸ்புர் என்ற இடத்தில் பஸ்சில் வந்த 200 பேருக்கு இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, உணவு மற்றும்
Mohammed Shami, BCCI, migrants, migrant workers, BCCI, Indian cricketer, Uttar Pradesh, Board of Control for Cricket in India, food, face mask, coronavirus, corona, covid-19, covid-19 pandemic, corona outbreak, india, india fights corona, ஷமி, பிசிசிஐ, பாராட்டு

அமரோகா : புலம் பெயர்ந்த மக்களுக்கு, இந்திய கிரிக்கெட் அணி வீரர், முகமது ஷமி, உணவு மற்றும் 'மாஸ்க்' வழங்கினார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உள்ளது. இதனால் அவதிப்பட்ட புலம்பெயர்ந்த மக்கள், தங்களது மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். உ.பி.,யின் சஹாஸ்புர் என்ற இடத்தில் பஸ்சில் வந்த 200 பேருக்கு இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, உணவு மற்றும் 'மாஸ்க்' வழங்கினார். தேசிய நெடுஞ்சாலையில் அம்ரோகா என்ற இடத்தில் 'டென்ட்' அமைத்து, அங்கு வருபவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கினார்.இவரை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பாராட்டியுள்ளது.


latest tamil news


இதுகுறித்து வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில், 'ஒட்டுமொத்த இந்தியாவும் கொரோனாவை ஒழிக்க போராடிக் கொண்டுள்ளது. வீடுகளுக்கு திரும்பி வரும் மக்களுக்கு, சாலைகளில் உணவுப் பொருட்கள் வழங்கினார் முகமது ஷமி. தவிர சஹாஸ்புரில் உள்ள தனது வீட்டுக்கு அருகில் உணவு விநியோகம் செய்யும் மையம் ஒன்றையும் அமைத்துள்ளார். நாங்கள் அனைவரும் உங்களுடன் இணைந்திருக்கிறோம்,' என தெரிவித்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X