பொது செய்தி

இந்தியா

வீடு திரும்பும் பீஹார் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
Bihar, Bihar govt, distributes, condom, migrant labourers, unwanted pregnancies, quarantine, Health department, coronavirus, corona, covid-19, corona outbreak, covid-19 pandemic, Care India, State Health Society

பாட்னா: பீஹாரில், மருத்துவ முகாம்களில், 14 நாட்கள் தனிமைபடுத்தலுக்கு பிறகு, வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு, அம்மாநில அரசு, இலவச ஆணுறைகளை வினியோகித்து வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வந்த, 28 முதல், 29 லட்சம் வரையிலான தொழிலாளர்கள், சிறப்பு ரயில் மற்றும் பஸ்கள் மூலம், சமீபத்தில், சொந்த மாநிலமான, பீஹார் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு, தனிமை மருத்துவ முகாம்களில், 14 நாட்கள் தங்க வைக்கப்பட்ட பின், வீடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இதுவரை, 8.77 லட்சம் தொழிலாளர்கள், தனிமை முகாம்களில் இருந்து, வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மேலும், 5.30 லட்சம் தொழிலாளர்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



இந்நிலையில், வீடு திரும்பும் தொழிலாளர்களால், எதிர்பாராத கர்ப்பங்கள் அதிகரிப்பதை தவிர்ப்பதற்காக, தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் திட்டத்தை, பீஹார் அரசு துவக்கி உள்ளது. முகாம்களில் இருந்து வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு, தலா இரண்டு, 'பாக்கெட்' ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

தொழிலாளர்களின் வீடுகளில், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும், சுகாதாரப் பணியாளர்களும், இலவச ஆணுறைகளை விநியோகித்து வருகின்றனர். 'தனிமை மருத்துவ முகாம்கள் செயல்படும் வரை, இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும்' என, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
03-ஜூன்-202020:12:34 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN அவர்களாக் கேட்டு பெற்றால் பயன்படுத்துவாரக்ள . வலுக்கட்டாயமாக இலவசமாகக் கொடுத்தால் பயன் ஏற்படுமோ
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
03-ஜூன்-202020:06:31 IST Report Abuse
வாய்மையே வெல்லும் வம்ச வ்ருத்தி அடைத்து தழைத்தோன்றி செம்மையா வாழனும் மக்களே.. சந்தோசமா இருங்க.உங்களோட .அப்பன் ஆத்தாவுக்கு நல்ல பேரை வாங்கி கொடுங்க அது போதும்
Rate this:
Cancel
Jay - SFO,யூ.எஸ்.ஏ
03-ஜூன்-202015:28:26 IST Report Abuse
Jay யார் அந்த தன்னார்வ டோண்டு நிறுவனம். அவன் மதத்தினருக்கு இதை விநியோகித்தானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X