வீடு திரும்பும் பீஹார் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை| Migrant workers in Bihar get free condoms after quarantine | Dinamalar

பொது செய்தி

இந்தியா

வீடு திரும்பும் பீஹார் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (30)
Share
Bihar, Bihar govt, distributes, condom, migrant labourers, unwanted pregnancies, quarantine, Health department, coronavirus, corona, covid-19, corona outbreak, covid-19 pandemic, Care India, State Health Society

பாட்னா: பீஹாரில், மருத்துவ முகாம்களில், 14 நாட்கள் தனிமைபடுத்தலுக்கு பிறகு, வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு, அம்மாநில அரசு, இலவச ஆணுறைகளை வினியோகித்து வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வந்த, 28 முதல், 29 லட்சம் வரையிலான தொழிலாளர்கள், சிறப்பு ரயில் மற்றும் பஸ்கள் மூலம், சமீபத்தில், சொந்த மாநிலமான, பீஹார் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு, தனிமை மருத்துவ முகாம்களில், 14 நாட்கள் தங்க வைக்கப்பட்ட பின், வீடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இதுவரை, 8.77 லட்சம் தொழிலாளர்கள், தனிமை முகாம்களில் இருந்து, வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மேலும், 5.30 லட்சம் தொழிலாளர்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


latest tamil newsஇந்நிலையில், வீடு திரும்பும் தொழிலாளர்களால், எதிர்பாராத கர்ப்பங்கள் அதிகரிப்பதை தவிர்ப்பதற்காக, தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் திட்டத்தை, பீஹார் அரசு துவக்கி உள்ளது. முகாம்களில் இருந்து வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு, தலா இரண்டு, 'பாக்கெட்' ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

தொழிலாளர்களின் வீடுகளில், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும், சுகாதாரப் பணியாளர்களும், இலவச ஆணுறைகளை விநியோகித்து வருகின்றனர். 'தனிமை மருத்துவ முகாம்கள் செயல்படும் வரை, இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும்' என, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X