ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு:சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா பணமோசடி வழக்கில், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி மீது டில்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.



latest tamil news



அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2007 ல் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, பீட்டர் முகர்ஜி மற்றும் அவரது மனைவி இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியாவில், அதிகளவு வெளிநாடு முதலீடு செய்வதற்கு சிதம்பரம் உதவி செய்துள்ளார். இதன் மூலம், சிதம்பரம் மகன் கார்த்திக்கு பலன் கிடைத்துள்ளது. இந்திராணி முகர்ஜி மூலம் கிடைத்த பலன் மூலம், ஸ்பெயின், இந்தியா, பிரிட்டனில், சிதம்பரமும், கார்த்தியும் சொத்துகளை வாங்கியுள்ளனர். என தெரிவித்துள்ளது. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை வைத்து இந்த குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




முன்னதாக, இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஐஎன்எக்ஸ் மீடியாவில் வெளிநாட்டு முதலீடு செய்வதற்கு சிதம்பரம் மற்றும் சிலர் ரூ.10 லட்சம் பணம் லஞ்சமாக வாங்கியதாக கூறப்பட்டிருந்தது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிதம்பரத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இதன் பின்னர் அக்., 16 ல் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். 3 மாதங்களுக்கு மேல் டில்லி திஹார் சிறையில் இருந்த சிதம்பரத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் தான் ஜாமின் கிடைத்தது.


latest tamil news



ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில், கடந்த 2017 மே மாதம், ஐ.என்.எக்ஸ்., மீடயாவுக்கு கடந்த 2007 ம் ஆண்டு வெளிநாட்டு நிதி கிடைப்பதற்கு, வெளிநாட்டு முதலீட்டு வாரியம் அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது என சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இதன் பின்னர் 9 மாதங்கள் கழித்து சிதம்பரம், கார்த்தி, மற்றும் சிலர் பணமோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
03-ஜூன்-202020:08:40 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN பா.ஜ.க நிர்வாகம் தெரிகிறதா பொருளாதார நிபுனத்துவம் தரத்திற்கு. ராகுல் என்ன சொல்கிறார். சோனியா என்ன சொல்கிறார் மன்மோகன்சிங் என்ன சொல்கிறார் கருத்து சொல்லுங்களேன். வேலுன்னு ஒருவர் ஊடகத்தில் துள்ளி குதிக்கிறார் இப்படியும் ஓர் பொழப்பு எவ்வளவு விஞ்ஞான ஊழல் பலே பலே ஆசாமின்னு தெரியுது.
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
03-ஜூன்-202020:03:08 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN வெரி குட் வெரிவெரி குட் சரியான தீர்வை காணுங்கள் நாட்டிற்கு நல்லது.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
03-ஜூன்-202019:46:11 IST Report Abuse
Tamilnesan இந்தியாவில் குற்றப்பத்திரிகை, சிறைவாசம், தண்டனை எல்லாம் சாதாரண பொது மக்களுக்கு தான். அரசியல்வியாதிகளுக்கு கிடையாது. சுதந்திரம் அடைந்த நாள் முதல் அரசியல்வியாதிகள் திருடிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரே ஒரு, அரசியல்வியாதிக்கு இது வரை தூக்கு தண்டனை கிடைத்து உள்ளதா. பணம், பதவி இருந்தால் சட்டத்தை விலைக்கு வாங்கி விடலாம். இது தான் இந்திய ஜனநாயகம். ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X