ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு:சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்| INX Media case: ED files charge sheet against Chidambaram, Karti | Dinamalar

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு:சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (34)
Share

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா பணமோசடி வழக்கில், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி மீது டில்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.latest tamil newsஅமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2007 ல் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, பீட்டர் முகர்ஜி மற்றும் அவரது மனைவி இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியாவில், அதிகளவு வெளிநாடு முதலீடு செய்வதற்கு சிதம்பரம் உதவி செய்துள்ளார். இதன் மூலம், சிதம்பரம் மகன் கார்த்திக்கு பலன் கிடைத்துள்ளது. இந்திராணி முகர்ஜி மூலம் கிடைத்த பலன் மூலம், ஸ்பெயின், இந்தியா, பிரிட்டனில், சிதம்பரமும், கார்த்தியும் சொத்துகளை வாங்கியுள்ளனர். என தெரிவித்துள்ளது. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை வைத்து இந்த குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது.


latest tamil news
முன்னதாக, இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஐஎன்எக்ஸ் மீடியாவில் வெளிநாட்டு முதலீடு செய்வதற்கு சிதம்பரம் மற்றும் சிலர் ரூ.10 லட்சம் பணம் லஞ்சமாக வாங்கியதாக கூறப்பட்டிருந்தது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிதம்பரத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இதன் பின்னர் அக்., 16 ல் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். 3 மாதங்களுக்கு மேல் டில்லி திஹார் சிறையில் இருந்த சிதம்பரத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் தான் ஜாமின் கிடைத்தது.


latest tamil newsஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில், கடந்த 2017 மே மாதம், ஐ.என்.எக்ஸ்., மீடயாவுக்கு கடந்த 2007 ம் ஆண்டு வெளிநாட்டு நிதி கிடைப்பதற்கு, வெளிநாட்டு முதலீட்டு வாரியம் அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது என சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இதன் பின்னர் 9 மாதங்கள் கழித்து சிதம்பரம், கார்த்தி, மற்றும் சிலர் பணமோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X