சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பயிரை மேய்ந்த வேலி: திருட்டு நகைகளை அமுக்கிய பெண் போலீஸ்

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
போலீஸ், நகைகள், பெண் போலீஸ், சஸ்பெண்ட்

கோவை: கோவையில் திருட்டு நகைகளை ஒப்படைக்காமல் மோசடி செய்த பெண் போலீஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை ஒண்டிபுதூரைச் சேர்ந்தவர் ஸ்வப்ண சுஜா, 35. சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் குற்றப்பிரிவில் இரண்டாம் நிலை போலீசாக பணிபுரிந்து வந்தார். திருட்டு வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து, அதன் பின் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி இவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 11 திருட்டு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட, 50 சவரன் தங்க நகைகளை, வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஒப்படைக்காமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, ஸ்வப்ண சுஜாவிடம் விசாரணை நடத்த இன்ஸ்பெக்டர் சிவகுமார் நியமிக்கப்பட்டார். ஆனால், சுஜா உரிய விளக்கம் தராமல் பணிக்கு வராமல் நீண்ட நாள் விடுப்பு எடுத்தார்.


latest tamil news




இதையடுத்து கடந்த பிப்., மாதம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், அவரை நேரில் ஆஜராகி விளக்கம் தருமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அப்போதும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து தலைமறைவாக இருந்த சுஜாவை போலீசார் தேடி வந்தனர். இதுகுறித்து, சிங்காநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கீதா மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து சுஜாவை தேடி வந்தனர். நேற்று மாநகர குற்றப்பிரிவு போலீசார் சுஜாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
04-ஜூன்-202016:33:40 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு அவர் தலைமறைவு ஆனதும், அவர் எங்கிருக்கான்றதும் டிபார்ட்மெண்ட்டுல மத்தவங்களுக்குத் தெரியாம இருந்திருக்காது
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
03-ஜூன்-202020:01:14 IST Report Abuse
வாய்மையே வெல்லும் பணம் "பத்தும்" செய்யும்...பிடிபட்ட பெண் பித்துக்கு தன்னோட காசிலேயே "கிரேக்கியமும்" செய்யும்.. சோணமுத்து ..அரசு வேலையும் போச்சா.. அட்றா சக்கை..
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
03-ஜூன்-202019:57:44 IST Report Abuse
K.n. Dhasarathan முதலில் இந்த திருடி யை டிஸ்மிஸ் செய்யுங்கள், அதன் பிறகு வீடு, பணம், சொத்துக்களை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் , ஒரு ரூபாய் செலவுக்கு வேண்டுமானால் கூட கோர்ட் அனுமதியுடன் தான் நடக்க வேண்டும், நேர்மையான நல்ல போலீஸ்கள் உயிரை கொடுத்து வேலை செய்கையில் இதைப்போல புல்லுருவிகளை உடனே களை எடுக்காவிட்டால் களைகள் பயிரை ( நல்ல மக்களை ) கெடுத்து விடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X