கொரோனாவை காற்றில் பறக்கவிட்டு கூட்டத்தை கூட்டிய சுகாதார அமைச்சர்

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவில் அமைச்சரை வரவேற்பதற்காக, ஊரடங்கு விதிகளை மீறியதுடன், சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்த மெகா பேரணி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 3,400 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 8 முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டு தலங்களை திறக்க கர்நாடக அரசு
Karnataka minister, Covid-19 rules, Congress, karnataka, bjp, politics, coronavirus, corona, covid-19, corona outbreak, corona update, corona news, covid-19 pandemic, lockdown, bangalore, curfew,

பெங்களூரு: கர்நாடகாவில் அமைச்சரை வரவேற்பதற்காக, ஊரடங்கு விதிகளை மீறியதுடன், சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்த மெகா பேரணி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகாவில் இதுவரை 3,400 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 8 முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டு தலங்களை திறக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.



latest tamil news




இந்நிலையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் வேதவதி நதிக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு சென்றுள்ளார். அப்போது சல்லகரே தாலுகாவுக்கு உட்பட்ட பரசுராமபுரத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் திரண்டிருந்த மக்கள், கைகளை தட்டியும், மலர்களை தூவியதுடன், மிகப்பெரிய ஆப்பிள் மாலையை அணிவித்து அமைச்சரை ஆரவாரத்துடன் வரவேற்றனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.


அமைச்சரே இப்படி செய்யலாமா ?



ஒரு அமைச்சரே இவ்வாறு செய்தால் மக்களை பற்றி என்ன சொல்வது? இது போன்ற நிகழ்வுகளை நிறுத்துவதுடன், இந்த நேரத்தில் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும்' என முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.


இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு, 'நீங்கள் வீட்டில் இருந்தாலும், வெளியில் இருந்தாலும் சமூக இடைவெளியை உறுதியாக பின்பற்ற வேண்டும். நாங்கள் உங்களை தடுக்க முடியாது. ஆனால் தயவு செய்து பிரதமர் மோடி, முதல்வர் எடியூரப்பா கூறுவதை கேளுங்கள். மாஸ்க் அணியுங்கள். நீங்கள் வீட்டிற்கு சென்றவுடன் உங்கள் குழந்தைகளை தொடதீர்கள். நன்றாக கைகளை கழுவுங்கள்' என கேட்டுகொண்டார்

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
08-ஜூன்-202006:33:57 IST Report Abuse
NARAYANAN.V ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் மக்களை மக்களாக பாவிப்பதில்லை. மாக்களாக பாவிக்கப்படுகிறார்கள்.தேர்தலுக்கு முன் அரசியல்வாதிகள் மக்களின் கால்களில் விழுகிறார்கள்.தேர்தல் முடிந்தவுடன் அரசியல்வாதிகளின் கால்களில் மக்கள் விழுகிறார்கள்.இதுதான் இந்தியாவில் எழுதப்படாத சட்டமாக உள்ளது.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
07-ஜூன்-202011:38:13 IST Report Abuse
Malick Raja கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்த கதைதான் .. பொறுத்திருந்து பார்க்கலாம் நம்ம ஈபியஸ் மூன்று நாட்கள் திடீர் ஊரடங்கு அறிவிப்பில் விளைந்த கோயம்பேடு கொரோனா பரவல் இன்னும் தணியவில்லை .. மோடியண்ணன் அறிவித்த திடீர் ஊரடங்கும் மக்களின் நிலையை கேள்விக்குறியாக்கிவிட்டது .. எல்லாவற்றுக்கும் அன்று தமிழன் சொன்னது .. காணமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக நினைத்து போல இருக்குமாம் கல்லாதான் கற்ற கவி ... ..
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
03-ஜூன்-202019:01:24 IST Report Abuse
babu அதிகாரத்தில இருக்கறவன் கடவுள் மாதிரிப்பா, சந்தேகமோ, விமர்சனமோ, எதிர்கேள்வியோ கேக்கறவன் பூரா தேசத்துரோகி, அந்நிய மத கைக்கூலி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X