8 நிமிடம் 46 நொடி: ஜார்ஜ் பிளாயட் கொலையை வீடியோ எடுத்த 17 வயது சிறுமி| Teen who filmed George Floyd's death "Traumatised" by online harassment | Dinamalar

8 நிமிடம் 46 நொடி: ஜார்ஜ் பிளாயட் கொலையை வீடியோ எடுத்த 17 வயது சிறுமி

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (33)
Share
வாஷிங்டன் :அமெரிக்க போலீசால், கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட சம்பவத்தை 17 வயது சிறுமி மொபைல் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதவிவேற்றியது தான் தற்போது பெருங்கலவரமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.அமெரிக்காவின் மினியாபொலிசில், கடந்த மே.25-ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு, 46, என்ற ஆப்ரிக்க அமெரிக்கரிடம், ஒரு போலீஸ்காரர், சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து
George Floyd, George Floyd's death, teenager, Minneapolis, Darnella Frazer, harassment

வாஷிங்டன் :அமெரிக்க போலீசால், கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட சம்பவத்தை 17 வயது சிறுமி மொபைல் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதவிவேற்றியது தான் தற்போது பெருங்கலவரமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் மினியாபொலிசில், கடந்த மே.25-ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு, 46, என்ற ஆப்ரிக்க அமெரிக்கரிடம், ஒரு போலீஸ்காரர், சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து பிளாய்டை தரையில் சாய்த்து, அவருடைய கழுத்தில், தன் கால் முட்டியாமல் அந்த போலீஸ்காரர் நெருக்கியுள்ளார். இதில், மூச்சுவிட முடியாமல், பிளாய்டு, அதே இடத்தில் உயிரிழந்தார். இது சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாக பரவியது.


latest tamil news
இந்நிலையில் ஜார்ஜ் பிளாயட் கழுத்தை முட்டி காலால் நெருக்கும் காட்சியை மொபைலில் வீடியோவாக எடுத்தவர் 17 வயது டார்னெல்லா என்ற சிறுமி என தெரியவந்துள்ளது.
இது குறித்து சிறுமி டார்னெல்லா கூறியது, கடந்த மே 25-ம் தேதி மின்னபொலிஸ் நகரில் கடைக்கு வந்த ஜார்ஜ் பிளாயட், 20 டாலர் கொடுத்து சிகரெட் கேட்டுள்ளார். அந்த டாலர் போலியானது என கண்டுபிடித்த கடைக்காரர் போலீசை வரவழைத்துள்ளார். காரில் வந்த நான்கு போலீசாரில் ஒருவர் தான் ஜார்ஜ் பிளாய்ட் கைகளை பின்னால் கட்டி குப்புற படுக்க வைத்து கழுத்தை தனது முட்டி காலால் நெருக்கினார்.

தனக்கு மூச்சு திணறல் ஏற்படுவதால் முட்டி காலை எடுக்குமாறு ஜார்ஜ் முனங்கினார். அதனை கேட்காமல் தொடர்ந்து நெருக்கியதால் ஜார்ஜ் பிளாயட் இறந்தார். 8 நிமிடம் 46 நொடி நடந்த அந்த கொடூர நிகழ்வை நான் சில அடி தூரத்தில் நின்று வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதவிவேற்றினேன் என்றார். இந்த வீடியோ காட்சி தான் அமெரிக்கா முழுதும் பரவி பெரும்பாலான நகரங்களில், இந்தப் போராட்டங்கள், வன்முறையாக மாறியுள்ளன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X