இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (2)
Share
India, CoronaVirus_Update, DeathCount, Coronavirus, COVID-19,  corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில், ஒரே நாளில் 8,909 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 217 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5,815 ஆக அதிகரித்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (ஜூன் 3) காலை 11:15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,98,706 ல் இருந்து 2, 07,615 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 5,815 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,00,303, ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் தற்போது 1,01,497 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,909 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 217 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்


மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 72,300 - 2,465
தமிழகம் - 24,586 - 197
டில்லி - 22,132 - 556
குஜராத் - 17,617 - 1,092
ராஜஸ்தான் - 9,373 - 203
மத்திய பிரதேசம் - 8,420 - 364
உத்தர பிரதேசம் - 8,361 - 222
மேற்கு வங்கம்- 6,168 - 335
ஆந்திரா - 3,898 - 64
கர்நாடகா- 3,796 - 52
தெலுங்கானா - 2,891 - 92
கேரளா - 1,412 - 11
புதுச்சேரி- 82 - 0

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X