இந்திய - சீன எல்லை பிரச்னை: 6-ம் தேதி ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை| Armies of India, China to hold Lt Gen level talks on June 6 to resolve Ladakh crisis | Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்திய - சீன எல்லை பிரச்னை: 6-ம் தேதி ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (6)
Share
 India, China, Top Military, Talks, Border Tension, Ladakh, Lt Gen level talks, Lieutenant General, Line of Actual Control, People's Liberation Army, PLA, Lt Gen Harinder Singh,  Army

புதுடில்லி: இந்திய-சீன எல்லை விவகாரம் தொடர்பாக வரும் 6-ம் தேதி ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய - சீன எல்லை பகுதியில் காஷ்மீர் அருகே உள்ள கிழக்கு லடாக் பகுதிக்குள், கடந்த, 5ம் தேதி அத்துமீறி நுழைந்த சீன வீரர்களால் இரு தரப்புக்கும் கை கலப்பு ஏற்பட்டது. இதில், இரு தரப்பிலும் சில வீரர்கள் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான சிக்கிமிலும், இந்திய - சீன எல்லை பகுதி யில் இதுபோன்ற ஒரு நிகழ்வு தொடர்கதையாகி வருகிறது. இதனால் எல்லை பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது.


latest tamil newsஇந்நிலையில் இந்த பிரச்ணைக்கு தீ்ர்வாக இரு தரப்பிலும் வரும் 6 -ம் தேதி ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, இந்திய சீன இடையேயான எல்லை பிரச்னை குறித்து ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை வரும் 6-ம் தேதி லடாக்கில் நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் லெப்டினட் ஜெனரல் ஹரீந்தர்சிங் தலைமையில் 14 உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X