இந்தியா பெயரை மாற்றக் கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு| SC dismisses plea to change India's name to 'Bharat' | Dinamalar

இந்தியா பெயரை மாற்றக் கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (11+ 14)
Share
India, Supreme Court, SC, Bharat, central government, CJI, S A Bonde, constitution, Namaha, Ashwin Vaish, இந்தியா,சுப்ரீம் கோர்ட்,  பாரதம், இந்தியா, உச்சநீதிமன்றம்

புதுடில்லி: இந்தியாவின் பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்யக்கோரிய வழக்கை விசாரிக்க மறுத்து முடித்து வைத்த உச்சநீதிமன்றம், அது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை மனுதாரர் அணுகலாம் என தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், நமாஹ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: அரசியலமைப்புச் சட்டத்தில், நம் நாட்டுக்கான இந்தியா எனும் பெயர், ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்டது. இந்தியா என்று சொல்லும் போது அது, ஆங்கிலேயேர்களிடம் நாம் அடிமைப்பட்டு இருந்ததை நினைவூட்டுகிறது. அதனால், இந்தியாவின் பெயரை, பாரத் என மாற்ற வேண்டும்.

அது, சுதந்திரத்துக்காக போராடிய முன்னோருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அவர்களின் போரட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக அமையும்; நாம், ஆங்கிலேயர் ஆதிக்கத்தை கடந்து விட்டோம் என்பதையும் தெரிவிக்கும்.கடந்த, 1948-ல், அரசியலமைப்புச் சட்ட வரைவு குறித்த விவாதம் நடந்தபோது, இந்தியாவுக்கு ஹிந்துஸ்தான் அல்லது பாரத் என பெயர் வைக்க, பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர். அதனால், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, இந்தியா எனும் பெயரை, பாரத் என மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.


latest tamil news


இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அதனை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மனுதாரர், இந்த மனுவை சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கலாம். இதனை அமைச்சகம் கோரிக்கையாக பரிசீலனை செய்யலாம். அரசியல்சாசன புத்தகத்திலும் ' இந்தியா' 'பாரத்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X