காஷ்மீரில் என்கவுன்டர்: மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை| 3 terrorists killed in Pulwama encounter | Dinamalar

காஷ்மீரில் என்கவுன்டர்: மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (5)
Share
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுன்டரில் ஜெய்ஷி இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் உறவினர் உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கன்காங் என்ற பகுதியில் பயங்கரவாதகிள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புபடையினர் தேடுதல் வேட்டை நடத்தி பயங்கரவாதிகள்
JeM, Masood Azhar, car-bombing, kill, encounter, J&K, Pulwama, Jammu and Kashmir, Jaish-e-Mohammed, Abdul Rehman, Fauji Bhaiis, IED attack

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுன்டரில் ஜெய்ஷி இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் உறவினர் உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கன்காங் என்ற பகுதியில் பயங்கரவாதகிள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புபடையினர் தேடுதல் வேட்டை நடத்தி பயங்கரவாதிகள் மறைவிடத்தை சுற்றி வளைத்தனர்.
அப்போது இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கி சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil newsசுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷி இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் உறவினர் என ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகள் தான் கடந்த சில நாட்களுக்கு முன் புல்வாமாவில் காரில் வெடிகுண்டை நிரப்பி வெடிக்க செய்ய முயன்றதும் அந்த முயற்சியை பாதுகாப்புபடையினர் முறியடித்தாகவும் கூறப்படுகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X