பொதுக்குழு கூடும் வரை துரைமுருகனே பொருளாளர்: ஸ்டாலின்| MK Stalin orders Durai Murugan to continue as DMK treasurer | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொதுக்குழு கூடும் வரை துரைமுருகனே பொருளாளர்: ஸ்டாலின்

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (28)
Share
சென்னை: தி.மு.க. பொருளாளராக துரை முருகன் நீடிப்பார் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த அன்பழன் கடந்த மார்ச்சில் காலமானார். புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய மார்ச் 29-ம் தேதி தி.மு.க., பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது. அப்போது தி.மு.க.,பொருளாளர் துரைமுருகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் கொரோனாவை தடுக்க நாடு தழுவிய
DMK, MK Stalin, Durai Murugan, DMK treasurer, TN news, tamil nadu

சென்னை: தி.மு.க. பொருளாளராக துரை முருகன் நீடிப்பார் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த அன்பழன் கடந்த மார்ச்சில் காலமானார். புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய மார்ச் 29-ம் தேதி தி.மு.க., பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது. அப்போது தி.மு.க.,பொருளாளர் துரைமுருகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் கொரோனாவை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கால் பொதுக்குழு ரத்து செய்யப்பட்டது.


latest tamil newsஇந்நிலையில் இன்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுக்குழு கூடி கட்சியின் பொருளாளர், பொதுச்செயலர் ஆகிய பதவிக்கான தேர்வு செய்ய முடியாத அசாதாரண சூழல் சூழல் நிலவுகிறது. பொதுக்குழு கூடும் வரை தி.மு.க. பொருளாளராக துரை முருகன் தொடர்ந்து நீடிப்பார். அவரது ராஜினாமா கடிதம் மீதான நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X