பொது செய்தி

தமிழ்நாடு

‛காட்மேன்' வெப்சீரிஸ் தயாரிப்பு நிறுவனம்: உண்மையில் இருக்கிறதா?

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
காட்மேன், வெப்சீரிஸ்,பாஜ, சுப்ரமணியன்சாமி, சுப்ரமணியசாமி,

சென்னை : இந்து மத நம்பிக்கைகளுக்கு விரோதமாகவும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையிலும் கருத்துகளைக் கொண்ட காட்மேன் என்ற வெப்சீரிசை பெதர்ஸ் எண்டெர்டெயின்மென்ட்என்ற நிறுவனம் தயாரித்ததாக தகவல்கள் வந்தன. ஆனால், அப்படி ஒரு நிறுவனமே பதிவு செய்யப்படவில்லை என்று பாரதிய ஜனதா எம்.பி., சுப்ரமணிய சாமி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் .

ஜெய்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் நடித்துள்ள வெப்சீரிஸ் 'காட்மேன்'. இதை பாபு யோகேஸ்வரன் என்பவர் இயக்கி இருந்தார். ஜீ5 ஓடிடியில் ஜுன் 12ல் வெளியிட இருந்தனர். அதற்கு முன்பாக இதன் டீசர் கடந்த வாரம் வெளியானது. அதில் இந்து மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையிலும், பிராமண சமூகத்தை இழிவுப்படுத்தியும் வசனங்களும், ஆபாச காட்சிகளும் நிறைந்து இருந்தன. இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இந்த தொடரை தடை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட இதன் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ஜீ5 மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது.

இதற்கிடையே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். போலீசார், காட்மேன் தொடரின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர். பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதை தொடர்ந்து இந்த தொடரை நிறுத்தி வைப்பதாக ஜீ5 நிறுவனம் அறிவித்தது.


latest tamil news



இந்நிலையில், பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன்சாமி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: காட்மேன் சீரியலை தயாரித்த பெதர்ஸ் என்டர்டெயின்மென்ட் அறிக்கையை நான் பார்த்தேன். கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகத்தில், அது போன்ற நிறுவனம் ரகுபதி இளங்கோ, (டின் 017700453) அல்லது லீனி இளங்கோ ஆகியோர் பெயரில் இல்லை. அவர்கள், கடந்த 2007ல் கலர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் வைத்திருந்தனர். ஆனால், கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகம் 2008ல் அதனை நீக்கிவிட்டது. இதனால், அவர்கள் மீது ஐபிசி 420 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இந்த வெப்சீரிஸ் தொடர்பாக, ஜீ5யின் சுபாஷ் சந்திராவிடம் சுப்ரமணியன்சாமி பேசியுள்ளார். அப்போது, இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பு செய்யப்படாது என சுபாஷ் சந்திரா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
10-ஜூன்-202012:01:15 IST Report Abuse
Vivekanandan Mahalingam தமிழ் திரைப்படத்துறை முழுவதுமாக மிஷினரி கையில் . கமல், சுஹாசினி, சாறு ஹசன் இவர்கள் மிஷினரிகள் பணத்துக்காக வேலை பார்ப்பவர்கள் என அனைவரும் தெரிவிக்கிறார்கள். இந்த மிஷினரிகள் தமிழ் நாட்டை சீரழித்து விட்டார்கள்
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
08-ஜூன்-202011:50:30 IST Report Abuse
Nallavan Nallavan என்ன சாமி செம கவனிப்போ ஏன் எனில் இது ஊர் அறிந்த விஷயம் தயாரிப்பு JEE சேனல் என்று குழந்தை க்கு கூட தெரியும் அதனால் தான் தயாரிப்பாள என்கிறபோது வேறு யாரும் வரவில்லை இப்போ இதை அமுக்கி விட வேலை நடந்து வருகிறது
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
04-ஜூன்-202011:54:09 IST Report Abuse
skv srinivasankrishnaveni திமிறுத்தனம் தான் காரணம் பொல்லதுகள் ஒதுங்கியே போவதால் இந்த இழிநிலை. இவனுகளுக்கெல்லாம் மதம் மாறுவதே கண்டதையும் தின்னலாம் குடிக்கலாம் என்ற கேவலமான அறிவுதான் இருக்கு எந்த ப்ராமின்சும் நான் இராமிண்ஸை கேவாமாபேசுறதுமில்லே பன்னரியக்கண்டால் ஒதுங்குறோம் எதனால் அது அழுக்கில் சேற்றிலே மிதந்துட்டுவந்ததே என்று தான் அதுபோலவே நம்மளவாயில்லேன்னா நாம் ஒதுங்கிக்கறோம் காதல் என்று சொல்லின்னுகண்டவனையும் திருமணம் செய்யும் பொண்ணுகள் படுmபாடு பல ஆண்களையும் கூட சொல்லுவேன் பெண்ணைப்பெற்றவள் வந்த மருமகனை நாயைவிடக்கேவலமா நடத்துறாளுக ஒன்லி பிகாஸ் அவன் பிராமின் என்று கலப்புமணம் செய்தால் அவள் பணம்காய்ச்சிமரமாயிருந்தால் கூட அவளை கேவலமாப்பேசும் இன்லாஸ் களும் இருக்காங்க தன்னையேநம்பித்திருமணம் புரிஞ்சு மணமகன் ஒருபோதும் தன மனைவியாய் தன அம்மா அப்பா சகோதரிகள் கேவலமா பேசுவதை கண்டிக்கவேண்டும் மாட்டானுக தைரியமா சொல்லுறானுக டிவோர்ஸ்செய்வேன் என்று மிரட்டலுக்கு காதல் பெரிசா தெரிஞ்சால் திருமணம் ஆனதும் மனைவியா கேவலமா தெரியவைக்கறதுலே மஹாகேட்டிகள் இந்த அம்மாக்காரிகள் அண்ட் உடனிருந்த அக்காக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X