‛காட்மேன் வெப்சீரிஸ் தயாரிப்பு நிறுவனம்: உண்மையில் இருக்கிறதா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

‛காட்மேன்' வெப்சீரிஸ் தயாரிப்பு நிறுவனம்: உண்மையில் இருக்கிறதா?

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (29)
Share
காட்மேன், வெப்சீரிஸ்,பாஜ, சுப்ரமணியன்சாமி, சுப்ரமணியசாமி,

சென்னை : இந்து மத நம்பிக்கைகளுக்கு விரோதமாகவும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையிலும் கருத்துகளைக் கொண்ட காட்மேன் என்ற வெப்சீரிசை பெதர்ஸ் எண்டெர்டெயின்மென்ட்என்ற நிறுவனம் தயாரித்ததாக தகவல்கள் வந்தன. ஆனால், அப்படி ஒரு நிறுவனமே பதிவு செய்யப்படவில்லை என்று பாரதிய ஜனதா எம்.பி., சுப்ரமணிய சாமி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் .

ஜெய்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் நடித்துள்ள வெப்சீரிஸ் 'காட்மேன்'. இதை பாபு யோகேஸ்வரன் என்பவர் இயக்கி இருந்தார். ஜீ5 ஓடிடியில் ஜுன் 12ல் வெளியிட இருந்தனர். அதற்கு முன்பாக இதன் டீசர் கடந்த வாரம் வெளியானது. அதில் இந்து மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையிலும், பிராமண சமூகத்தை இழிவுப்படுத்தியும் வசனங்களும், ஆபாச காட்சிகளும் நிறைந்து இருந்தன. இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இந்த தொடரை தடை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட இதன் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ஜீ5 மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது.

இதற்கிடையே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். போலீசார், காட்மேன் தொடரின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர். பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதை தொடர்ந்து இந்த தொடரை நிறுத்தி வைப்பதாக ஜீ5 நிறுவனம் அறிவித்தது.


latest tamil news



இந்நிலையில், பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன்சாமி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: காட்மேன் சீரியலை தயாரித்த பெதர்ஸ் என்டர்டெயின்மென்ட் அறிக்கையை நான் பார்த்தேன். கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகத்தில், அது போன்ற நிறுவனம் ரகுபதி இளங்கோ, (டின் 017700453) அல்லது லீனி இளங்கோ ஆகியோர் பெயரில் இல்லை. அவர்கள், கடந்த 2007ல் கலர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் வைத்திருந்தனர். ஆனால், கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகம் 2008ல் அதனை நீக்கிவிட்டது. இதனால், அவர்கள் மீது ஐபிசி 420 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இந்த வெப்சீரிஸ் தொடர்பாக, ஜீ5யின் சுபாஷ் சந்திராவிடம் சுப்ரமணியன்சாமி பேசியுள்ளார். அப்போது, இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பு செய்யப்படாது என சுபாஷ் சந்திரா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X