புதுடில்லி: இந்தியா- சீனா எல்லை பிரச்னை விவகாரத்தில் மத்திய அரசு தெளிவான முடிவை வெளியிட வேண்டும் என காங். எம்.பி., ராகுல் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய - சீன எல்லை பகுதியில் காஷ்மீர் அருகே உள்ள கிழக்கு லடாக் பகுதிக்குள், கடந்த, 5ம் தேதி அத்துமீறி நுழைந்த சீன வீரர்களால் இரு தரப்புக்கும் கை கலப்பு ஏற்பட்டது. இதில், இரு தரப்பிலும் சில வீரர்கள் காயம் அடைந்தனர்.
ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில் , சீன வீரர்கள் கிழக்கு லடாக்கிற்கு நகர்ந்துள்ளதாகவும், இந்தியாவும் நிலைமையை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என கூறியுள்ளார்.

இது தொடர்பாக காங். எம்.பி., ராகுல் கூறியதாவது: இந்திய சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன வீரர்கள் யாரும் இந்தியாவுக்குள் நுழையவில்லை எல்லையில் அதே நிலைமை தான் உள்ளது என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். நெருக்கடியான நேரத்தில் மவுனம் காப்பது சரியல்ல. இந்த விவகாரத்தில் எல்லையில் என்ன தான் நடக்கிறது எனமத்திய அரசு தெளிவான முடிவை வெளியிட வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE