பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் பிரபலமாகிய சீன எதிர்ப்பு செயலி பிளே ஸ்டோரில் நீக்கம்

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
remove china app, google play store, google, remove, Chinese apps, சீன எதிர்ப்பு செயலி, ரிமூவ் சீனா ஆப்ஸ், கூகுள், கூகுள் பிளே ஸ்டோர், நீக்கம்

புதுடில்லி: ஒரு மாதத்தில் 50 லட்சம் பேர் பதவிறக்கம் செய்த . சீன எதிர்ப்பு செயலியான 'ரிமுவ் சீனா ஆப்ஸ்' கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு, விதிமுறைகளை மீறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் பரவியுள்ளது. மேலும் இந்திய எல்லையில், சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. இதனால், சீன பொருட்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரசாரம் நடக்கிறது.
தொடர்ந்து மொபைலில் உள்ள சீன செயலிகளை நீக்கும் பொருட்டு ஜெய்ப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று 'ரிமூவ் சீனா ஆப்ஸ்' என்ற செயலியை கடந்த மே 17 ல் அறிமுகப்படுத்தியது. இது மொபைலில் உள்ள சீன செயலிகளை அடையாளம் காட்டி அதனை நீக்க பயன்படுத்துகிறது.


latest tamil news



ஒரே மாதத்தில் 50 லட்சம் பேர் பதவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது . இதற்கு தங்களது விதிமுறைகளை மீறியதே காரணம் என கூகுள் விளக்கமளித்துள்ளது. இந்த செயலி ஆஸி.,யிலும் வரவேற்பை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிக் டாக் செயலிக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட மிட்ரன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை பலர் பயன்படுத்தி வந்த நிலையில், அதனையும் கூகுள் பிளே ஸ்டார் நீக்கியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
04-ஜூன்-202020:26:49 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி மக்கள் விரும்பும் அப்ளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோரில் வைத்திருக்க வேண்டும். இப்படி அதை தூக்கியது தவறு. சீன ஆப்புகள் வேண்டாமேன்பவர்கள் தானே அதைப் பயன் படுத்துவார்கள்? இதில் என்ன விதி மீறிய தவறு?இப்படி கூகுள் செயல் பட்டால் நாங்களும் கூகுளுக்கு மாற்றான ஒரு செயலியைத் தேடத் தொடங்குவோம்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
04-ஜூன்-202000:48:31 IST Report Abuse
தல புராணம் இங்கே சீனசெயலி என்று பதறும் பக்தால்ஸ் மொத்த நிகர இறக்குமதி உண்மையில் $62 பில்லியன் என்பதை அறிவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். சீனாவில் இருந்து மொத்த இறக்குமதி $90 பில்லியன். இதில் மிக பெரும்பங்கு செல்போன் கிட்கள் இறக்குமதி, ஆமாம், நேற்று நம்ம மத்திய மந்திரி சொன்ன "இந்தியாவில் செல்போன்கள் உற்பத்தி பல ஆயிரம் கோடி உயர்ந்துள்ளது" என்பதும், இந்த அம்பானிக்காக இறக்குமதியான சரக்கு தான் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இதை தான் நான் நேற்று ஹைக்கூ கவிதை மாதிரி "ஆனா சட்டை சீனாவோடது" ன்னு சொன்னேன்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
04-ஜூன்-202000:43:01 IST Report Abuse
தல புராணம் The commerce ministry on said trade deficit with China narrowed by $10 billion in இந்திய வர்த்தக துறை, 2018-19 காலகட்டத்தில் சீனாவிலிருந்து ஆகும் நிகர இறக்குமதி மதிப்பு $10 பில்லியன் குறைந்து, $53 பில்லியன் ஆக (குறைந்து) உள்ளது என்று சொன்னது. அதுவே பொய்யென்று வர்த்தக கணக்கு சொல்பவர்கள் சொல்கிறார்கள். இதே காலகட்டத்தில் ஹாங்காங் கில் இருந்து ஆகும் இறக்குமதி கணிசமான பில்லியன்கள் கூடியிருக்கிறது. இரண்டு நாடுகளும் சீனா தான் என்று அறியாமல், இங்கே சீனசெயலி என்று பதறும் பக்தால்ஸ் மொத்த நிகர இறக்குமதி உண்மையில் $62 பில்லியன் என்பதை அறிவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அந்த அத்தனை பில்லியன்களின் இறக்குமதியும் மார்வாடியும், குஜ்ஜூகளும் தான் கண்டைனர் கண்டைனர்களாக செய்கிறார்கள் என்பதையும் மண்டைக்குள் ஏற்றி கொள்ளவேண்டும். சீனாவில் இருந்து மொத்த இறக்குமதி $90 பில்லியன் என்பதும், நேற்று நம்ம மத்திய மந்திரி சொன்ன "இந்தியாவில் செல்போன்கள் உற்பத்தி பல ஆயிரம் கோடி உயர்ந்துள்ளது" என்பதும், இந்த அம்பானிக்காக இறக்குமதியான சரக்கு தான் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X