இந்தியாவில் பிரபலமாகிய சீன எதிர்ப்பு செயலி பிளே ஸ்டோரில் நீக்கம்| Google pulls popular app that helped remove Chinese apps from phones | Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் பிரபலமாகிய சீன எதிர்ப்பு செயலி பிளே ஸ்டோரில் நீக்கம்

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (12)
Share
புதுடில்லி: ஒரு மாதத்தில் 50 லட்சம் பேர் பதவிறக்கம் செய்த . சீன எதிர்ப்பு செயலியான 'ரிமுவ் சீனா ஆப்ஸ்' கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு, விதிமுறைகளை மீறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதுகொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் பரவியுள்ளது. மேலும் இந்திய எல்லையில், சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. இதனால், சீன பொருட்களுக்கு எதிராக சமூக
remove china app, google play store, google, remove, Chinese apps, சீன எதிர்ப்பு செயலி, ரிமூவ் சீனா ஆப்ஸ், கூகுள், கூகுள் பிளே ஸ்டோர், நீக்கம்

புதுடில்லி: ஒரு மாதத்தில் 50 லட்சம் பேர் பதவிறக்கம் செய்த . சீன எதிர்ப்பு செயலியான 'ரிமுவ் சீனா ஆப்ஸ்' கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு, விதிமுறைகளை மீறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் பரவியுள்ளது. மேலும் இந்திய எல்லையில், சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. இதனால், சீன பொருட்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரசாரம் நடக்கிறது.
தொடர்ந்து மொபைலில் உள்ள சீன செயலிகளை நீக்கும் பொருட்டு ஜெய்ப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று 'ரிமூவ் சீனா ஆப்ஸ்' என்ற செயலியை கடந்த மே 17 ல் அறிமுகப்படுத்தியது. இது மொபைலில் உள்ள சீன செயலிகளை அடையாளம் காட்டி அதனை நீக்க பயன்படுத்துகிறது.


latest tamil newsஒரே மாதத்தில் 50 லட்சம் பேர் பதவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது . இதற்கு தங்களது விதிமுறைகளை மீறியதே காரணம் என கூகுள் விளக்கமளித்துள்ளது. இந்த செயலி ஆஸி.,யிலும் வரவேற்பை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிக் டாக் செயலிக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட மிட்ரன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை பலர் பயன்படுத்தி வந்த நிலையில், அதனையும் கூகுள் பிளே ஸ்டார் நீக்கியுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X