பொது செய்தி

தமிழ்நாடு

திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனுக்கு கொரோனா

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (48)
Share
Advertisement
சென்னை: தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில்,1,286 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக
dmk, mla, J Anbazhagan, corona, coronavirus, covid-19, corona in tn, corona update, coronavirus update, அன்பழகன், கொரோனா, திமுக

சென்னை: தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில்,1,286 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 11 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 208 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக எம்.எல்.ஏ., ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. சென்னை, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனுக்கு(61) கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர், குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூச்சுத்திணறலோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகனுக்கு, வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் இருப்பதால், டாக்டர்களில் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் அவர் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
04-ஜூன்-202019:04:31 IST Report Abuse
Tamilnesan விரைவில் குணமடைந்து வீடு திரும்ப...
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
04-ஜூன்-202018:56:28 IST Report Abuse
Tamilnesan க்ரோம்பேட் கழக உடன்பிறப்பு ஜெகத்ரட்சன் மருத்துவமனையாக இருக்கலாம். அவர் தானே, நிலத்தை வளைத்து போட்டு பல ஏக்கர் கணக்கில் மருத்துவமனை காட்டியிருக்கிறார். இதே, பொதுஜனம் யாரவது செய்திருந்தால் ஒரே நாளில் வீட்டை இடித்து விடுவார்கள். பெருந்தலைவர் காமராஜர் மிக சரியாக சொன்னார், இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று. கூட்டு கொள்ளை அடிப்பதில் இரு கட்சிகளும் சமரசமாகி விடுவார்கள். பாதிப்பு சாதாரண பொது மக்களுக்கு தான். எப்படி, டாஸ்மாக் விஷயத்தில் இரு கட்சிகளும் சமரசமாகி பொது மக்களை மது மயக்கத்தில் ஆழ்த்தி முன்னேற விடாமல் தடுக்கிறார்களோ, அப்படி தான் மற்ற அணைத்து விஷயங்களும். "முழித்து கொண்டோரெல்லாம் பிழைத்து கொண்டார், முன்போல் குறட்டை விட்டோரெல்லாம், கோட்டை விட்டார்" பட்டுக்கோட்டையாரின் வைர வரிகள். ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
04-ஜூன்-202018:05:46 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு ஒரு கொரோனாவை இன்னொரு கொரோனா தாக்குறதை இப்பத்தான் கேள்விப்படுறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X