பொது செய்தி

இந்தியா

பொதுத்துறை வங்கிகள் ரூ.10,361 கோடி கடனுதவி: நிர்மலா

Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி: அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ், ஜூன் 1ம் தேதி வரை, பொதுத்துறை வங்கிகள் ரூ.10,361.75 கோடி கடனுதவி அளித்துள்ளன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



latest tamil news


மத்திய அரசு அறிவித்த, 20 லட்சம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டத்தின் கீழ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், 3 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ் பொதுத் துறை நிறுவனங்கள், எவ்வித உத்தரவாதமும் இல்லாமல், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, கடன் வழங்கி வருகின்றன.


latest tamil news


இதன்படி, ஜூன் 1ம் தேதி வரை, பொதுத்துறை வங்கிகள் ரூ.10,361.75 கோடி கடனுதவி அளித்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதத்தின் முதல் இரு நாட்களில் மட்டும் ரூ.3,892.78 கோடி கடனுதவி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
04-ஜூன்-202010:14:03 IST Report Abuse
Sandru தலைக்கு மேலே வெள்ளம் போனால் சான் என்ன மூலம் என்ன . பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.
Rate this:
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
04-ஜூன்-202009:30:07 IST Report Abuse
arudra1951 வங்கிகள் கடன் பெற்றவர்களின் பெயர்களையும் வெளியிட்டால் பணம் யாருக்கு கொடுத்தார்கள் என்று தெரியும் இப்படி எல்லாம் இந்த நாட்டில் நடப்பதால் தான் கொரோன வந்தது
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-ஜூன்-202007:19:46 IST Report Abuse
Mani . V "முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன். இரண்டு பாழு. ஒண்ணுலே தண்ணியே இல்ல. தண்ணியில்லாக் குளத்துக்கு வந்தது மூணுபேரு இரண்டு பேரு நொண்டி ஒருவனுக்கு காலே இல்ல. காலில்லா மனுஷனைக் கட்டிய மனைவி மூணு இரண்டு பேரு முடம். ஒருத்திக்கு கையேஇல்லை. கையில்லா முடத்துக்கு பிறந்த பிள்ளை மூணு இரண்டு பேரு குருடு .ஒரு பிள்ளைக்கு கண்ணே இல்ல. கண்ணில்லாப் பிள்ளையை வளர்க்க வந்தவங்க மூணு இரண்டு பேர் ஊமை ஒருத்திக்கு வாயே இல்ல. வாயில்லா மனுஷியிடம் விஷயத்தைக் கேட்க வந்தவங்க மூணு இரண்டு பேரு செவிடு ஒருவனுக்கு காதே இல்ல. அத்தனை பேரையும் ஆதரிக்க வந்தவங்க மூணு இரண்டு பேரு முண்டம் ஒருவனுக்கு தலையே இல்ல. என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X