ஜி7 மாநாட்டிற்கு மோடியை அழைத்த டிரம்ப்: சீனா ஆத்திரம்

Updated : ஜூன் 03, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

வாஷிங்டன்: ஜி7 மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை அழைத்திருப்பது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.



latest tamil news



ஜி7 மாநாட்டில் ஆண்டுக்கு ஒரு முறை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடி உலகப் பொருளாதாரம், ஆட்சி நிர்வாகம், கொள்கைகள் உள்ளிட்ட விஷயங்களை விவாதிப்பது வழக்கம்.

இந்நிலையில் ஜி7 மாநாட்டினை அமெரிக்க அதிபர் டிரம்ப் செப்டம்பருக்கு ஒத்தி வைத்துள்ளார், மேலும், இந்தியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென்கொரியா நாடுகளையும் சேர்த்து ஜி11 என மாற்றுவோம் என கூறியுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் ஜி7 மாநாட்டிற்கு பிரதமர் மோடியை டிரம்ப் அழைத்திருந்தார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஸாவோ லிஜியான் கூறியதாவது, ' அனைத்து சர்வதேச மாநாடுகள் மற்றும் அமைப்புகள் நாடுகளுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கை, உலக அமைதி, வளர்ச்சி போன்றவற்றை உறுதி செய்யும் சூழலை உருவாக்க வேண்டும். சீனாவுக்கு எதிராக சிறிய வட்டத்தை நாடுவது தோல்வியில் தான் முடியும்' இவ்வாறு தெரிவித்தார்.


latest tamil news



சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் வர்த்தகப்போர் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சீனாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையேயான சங்கிலி தொடர்பினை உடைக்க டிரம்ப் முயன்று வருவதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamizha tamizha - Bellevue,யூ.எஸ்.ஏ
05-ஜூன்-202006:13:05 IST Report Abuse
tamizha tamizha ரெண்டும் சேர்ந்து ......
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
04-ஜூன்-202013:58:59 IST Report Abuse
kumzi பேராசை பிடித்த சப்பை மூக்கனுக்கு அழிவு நெருங்கிவிட்டது
Rate this:
Cancel
Saravana kumar - Bangalore,இந்தியா
04-ஜூன்-202011:46:30 IST Report Abuse
Saravana kumar இந்தியாவுடைய முதல் எதிரி பாக்கிஸ்தான் இல்லை சீனா தான் என்பது தெள்ள தெளிவாக புரிந்து விட்டது . இதனை வருடங்களாக பாகிஸ்தானுக்கு ஆயுதங்களும் பணமும் கொடுத்து இந்தியாவுக்கு எதிரே தூண்டி விட்டவர்கள் சீனா காரர்கள் தான் . சீனா வுக்கு உலகில் number one உடனே ஆக வேண்டும் அதுவும் உடனே ஆக வேண்டும் என்ற பேராசை , எங்கே இந்தியா பொருளாதாரத்தில் அவர்களுக்கு போட்டியாக வந்துவிடுமோ என்ற பயம் அதனால் இந்தியா வுக்கு எதிரே அணைத்து வேலைகளையும் செய்கிறார்கள் . ஒன்று மட்டும் நிச்சயம் , சீனா இந்த அநியாயம் அக்கிரமங்களை செய்தால் சீனாவுடைய அழிவு வெகு தூரத்தில் இல்லை , கர்மா வினை அவர்களை தாக்கும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X