கார் வெடிகுண்டு தயாரித்த பயங்கரவாதி காஷ்மீர், 'என்கவுன்டரில்' சுட்டுக் கொலை

Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 கார் வெடிகுண்டு தயாரித்த பயங்கரவாதி காஷ்மீர், 'என்கவுன்டரில்' சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்; ஜெய்ஷ் -- இ -- முகமது பயங்கரவாத அமைப்புக்கு, சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை தயாரித்து தந்த, அப்துல் ரஹ்மான் உட்பட, மூன்று பயங்கரவாதிகளை, ஜம்மு -- காஷ்மீர் போலீசார், நேற்று சுட்டுக் கொன்றனர்.

கடந்த ஆண்டு, ஜம்மு -- காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் வாகனத்தின் மீது, ஜெய்ஷ் -- இ -- முகமது பயங்கரவாதிகள், கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள், பலியாயினர். இதைப் போலவே, ஜம்மு -- காஷ்மீரில், மேலும் பல தாக்குதல்களை நடத்த, ஜெய்ஷ் -- இ -- முகமது பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக, ஜம்மு - காஷ்மீர் முழுதும், தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், கடந்த, 27ம் தேதி, புல்வாமாவில், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட காரை, வாகன கண்காணிப்பின் போது, போலீசார் மடக்கி பிடித்தனர். பின் அந்தக் காரை, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று வெடிக்க செய்தனர்.இந்தக் கார், புல்வாமாவில் வசிக்கும், சமீர் அகமது தர் என்ற பயங்கரவாதியிடம் ஒப்படைக்க, எடுத்து சென்ற வழியில், போலீசாரிடம் பிடிபட்டது. தீவிரம்இந்த சமீர் தர், கடந்த ஆண்டு புல்வாமா தாக்குதலில், மனித வெடிகுண்டாக செயல்பட்ட ஆதில் தர் என்ற பயங்கரவாதியின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.புல்வாமாவின், ராஜ்போரா பகுதியில் உள்ள, 44வது ஆயுத படைப்பிரிவின் முகாம் மீது, இந்த காரை மோதி வெடிக்க செய்ய, பயங்கரவாதிகள் திட்டமிட்ட தகவல் தெரியவந்ததையடுத்து, அவர்களை பிடிக்கும் பணியில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தின், கன்கன் பகுதியில், பயங்கரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே, நேற்று காலை, பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த, 'என்கவுன்ட்டர்' குறித்து, ஐ.ஜி., விஜயகுமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்த துப்பாக்கி சண்டையில், ஜெய்ஷ் -- இ -- முகமது பயங்கரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அதில் ஒருவர், பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்கிற, பவ்ஜி பாய். இவர், ஜெய்ஷ் -- இ -- முகமது அமைப்புக்கு, சக்தி வாய்ந்த நவீன வெடிகுண்டுகளை தயாரித்து தரும் பணிகளை செய்து வந்தார். பெரிய வெற்றிகடந்த, 27ல், வெடிகுண்டு பொருத்தப்பட்ட காரை பிடித்தபோதே, அப்துல் ரஹ்மான் தப்பினார். அவரை விரைவில் பிடித்துவிடுவோம் என்று உறுதி அளித்தோம். அது, இப்போது நிறைவேறி உள்ளது.இதை, பாதுகாப்பு படையினரின் தீவிர முயற்சிக்கு கிடைத்த, மிகப் பெரிய வெற்றியாக கருதுகிறோம். இவரை தவிர, ஜெய்ஷ் -- இ -- முகமது அமைப்பை சேர்ந்த, வாலித் பாய், லம்பு பாய் என்ற, இரண்டு வெடிகுண்டு நிபுணர்கள், காஷ்மீரில் பதுங்கி உள்ளனர். அவர்களும் விரைவில் பிடிபடுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

கொல்லப்பட்ட அப்துல் ரஹ்மானின் இயற்பெயர், இக்ரம் என கூறப்படுகிறது. கடந்த, 1999ல், 'ஏர் -- இந்தியா' பயணியர் விமானக் கடத்தலில் தேடப்பட்டு வரும், அப்துல் ரவுப் அஸ்கர் என்ற பயங்கரவாதிக்கு, இவர் மிக நெருக்கமானவர் என கூறப்படுகிறது. இந்த அஸ்கர், ஜெய்ஷ் -- இ -- முகமது அமைப்பின் தலைமை தளபதி மவுலானா மசூத் அஸாரின் சகோதரர் என தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட அப்துல் ரஹ்மான், மசூத் ஆஸாரின் உறவினரா என்பது குறித்து, உறுதியான தகவல் வெளியாகவில்லை.

பதுக்கல்
கடந்த, 27ல், புல்வாமாவில் பிடிபட்ட, வெடிகுண்டு பொருத்தப்பட்ட காரை போலவே, மேலும் இரண்டு கார்களை, அப்துல் ரஹ்மான் தயாரித்துள்ளதாகவும், அவை, ஜம்மு -- காஷ்மீரின், புட்காம் அல்லது குல்காம் மாவட்டங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் எனவும், போலீசார் சந்தேகிக்கின்றனர். பெரும் விபரீதம் நடப்பதற்கு முன், கார்களை பறிமுதல் செய்யும் பணியில், போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-ஜூன்-202004:50:35 IST Report Abuse
J.V. Iyer தீவிரவாதிகளை கைது செய்து சிறையில் அடைப்பதைவிட என்கவுண்டரில் போட்டு தள்ளுவதுதான், நாட்டிற்கு நல்லது. சிறையில் அடைத்தல், தப்பித்து, மேலும் பல தீவிரவாதிகளை உருவாக்குவார்கள்.
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
04-ஜூன்-202019:39:01 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN மிகச்சரியான செயல் இப்படி சுட்டு தள்ளனும் நாடுஉறுபடும் .
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
04-ஜூன்-202007:14:07 IST Report Abuse
வாய்மையே வெல்லும் நல்ல விஷயம்..எல்லையில் தவெஷிகள் /துஷ்டர்கள் ஒழிந்தால் பாரத நாடு சிறந்த தூய்மையான ஸ்வாசக்காற்றை சுவாசிக்கும் . பாகிஸ்தான் அழிவது சர்வநிச்சயம்.. இங்கு நிம்மதியாக இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களே இதை ஒத்துக்கொள்வார்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X