பொது செய்தி

இந்தியா

'ஐ.என்.எக்ஸ்., மீடியா' வழக்கில் சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (24+ 38)
Share
Advertisement
ஐ.என்.எக்ஸ்., மீடியா, வழக்கு, சிதம்பரம், குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடில்லி; 'ஐ.என்.எக்ஸ்., மீடியா' வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீது, பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையினர், நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், சிதம்பரம், நிதி அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, 2007ல், ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, வெளிநாட்டில் இருந்து, 305 கோடி ரூபாய், அன்னிய முதலீடு பெறப்பட்டது. இதற்கு, சிதம்பரம் முறைகேடாக அனுமதி அளித்ததாகவும், இதன் மூலம், அவரும், அவரது மகன் கார்த்தியும் ஆதாயம் அடைந்ததாகவும், 2017ல், சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஆண்டு ஆகஸ்டில், சி.பி.ஐ., அதிகாரிகள், சிதம்பரத்தை கைது செய்தனர். அவர், டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.சிதம்பரம் சிறையில் இருந்தபோது, அமலாக்கத்துறையினர், பணப் பரிமாற்ற மோசடி வழக்கில், அவரை கைது செய்து விசாரித்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பரில், சிதம்பரம் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில், பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி மீது, அமலாக்கத் துறையினர் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 'ஆன்லைன்' வாயிலாக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 'நீதிமன்றம் வழக்கம் போல் இயங்கத் துவங்கியதும், குற்றப்பத்திரிகை நகல், நேரில் தாக்கல் செய்யப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (24+ 38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
05-ஜூன்-202011:47:45 IST Report Abuse
Tamilnesan இதனால் என்ன பயன்? நீதிமன்றத்தில் உள்ளோர் இவரால் நியமிக்கப்பட்டவர். ஆகையால், இவரை ஒன்றுமே செய்ய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. இந்த செய்தியை படிப்பதால் நேரம் தான் செலவு. இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களால் இவருக்கு ஒரு சதவிகிதம் கூட தண்டனை வழங்க முடியாது.
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
04-ஜூன்-202019:05:55 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் சிதம்பரம் ஜாமின் மனுவை ரத்து செய்யக்கோரிய சிபிஐ மனு தள்ளுபடி ஏன் இன்னும் திருந்தலை யா நீங்கள்
Rate this:
blocked user - blocked,மயோட்
04-ஜூன்-202021:30:56 IST Report Abuse
blocked userஜாமீன் மட்டும் தொடரும். அதற்காக குற்றவாளி இல்லை என்று சொன்னது போல துள்ளக்கூடாது கூவை......
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
04-ஜூன்-202018:02:03 IST Report Abuse
Poongavoor Raghupathy காரோண
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X