லடாக் எல்லையில் பதற்றம்: 6ல் இந்தியா - சீனா பேச்சு

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (4+ 7)
Share
Advertisement
 லடாக், எல்லை, பதற்றம், இந்தியா, சீனா, பேச்சு

புதுடில்லி:இந்தியா - சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க, இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள், நாளை மறுநாள் சந்தித்து பேச உள்ளனர்.
லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது.இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதை தணிக்க, பிராந்திய ராணுவ கமாண்டர்கள் தலைமையில், பலமுறை நடத்திய பேச்சு பலனளிக்கவில்லை.

இந்நிலையில், இந்தியாவின் அழைப்பை ஏற்று, ராணுவ உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்த, சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளது.அதன்படி, நாளை மறுநாள், இந்திய ராணுவத்தின், 14வது படைப் பிரிவின், லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழு, சீன ராணுவ உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்த உள்ளது. லடாக்கில், இந்திய எல்லையில், சுஷுல் - மோல்டோ பகுதியில் இந்த பேச்சு நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சில் சுமுக தீர்வு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த, 2017ல், பூடான் எல்லையோரம், டோக்லாம் பகுதியில், சீன ராணுவத்தின் அத்துமீறல் காரணமாக ஏற்பட்ட பதற்றம், மூன்று மாதங்களுக்கு மேலாக நீடித்தது குறிப்பிடத்தக்கது.பாக்., துறைமுக பணிகள் தீவிரம்ஒரு புறம் இந்திய எல்லையில், ராணுவத்தை குவித்து பதற்றத்தை ஏற்படுத்தி வரும் சீனா, மறுபுறம், பாகிஸ்தானில், கவடார் துறைமுக பகுதியில் தன் கடற்படை தளத்தை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவது, செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சீனா - பாக்., பொருளாதார வழித்தடத்திட்டத்தில், கவடார் துறைமுகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறைமுகத்தை நவீனப்படுத்தி, அங்கு, தன் கடற்படை தளத்தை அமைக்கவும், இந்திய பெருங்கடல் பகுதியில், தன் ஆதிக்கத்தை அதிகரிக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஜூன்-202016:45:22 IST Report Abuse
ஆப்பு ஜிங் ஜிங்கும் மோடி ஐயாவும் பேசிக்க மாட்டாங்களா? மாமல்லபுரம் சந்திப்புக்கு அப்புறம் காய் உட்டுட்டாங்க போலிருக்கு.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
04-ஜூன்-202016:06:37 IST Report Abuse
skv srinivasankrishnaveni எல்லை தாண்டி வந்தான்னா போட்டு தள்ளுங்க அதுதான் பெஸ்ட் நாம் ஏவாமீதும் படை எடுக்கலீங்க ஆனால் இந்தமூநிருபேராசைபிடிச்சவங்கள் தான் பேயாட்டம் போடுது
Rate this:
Cancel
S.VELMURUGAN - TIRUCHIRAPPALLI,இந்தியா
04-ஜூன்-202012:09:08 IST Report Abuse
S.VELMURUGAN சீன அதிபர் ஜி ஜின்பிங் மிகவும் குழம்பிய நிலையில் இருக்கிறார். சீன அரசு உலக நாடுகளுக்கு கொரோன வைரஸை வேண்டுமென்றே பரப்பியது என்பதை WHO அமைப்பின் டெக்கினிக்கல் லீடு அவர்கள் Associate Press ல் வெளியிட்ட செய்திகளிலிருந்து உலக நாடுகள் நம்புகிறது. சீனாவின் கைகூலிகளான இம்ரான் கான் ஆப்கானிஸ்தானில் 6500 பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்ளனர் என்பதை UNSC ன் அறிவிப்பில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்.ஓலி தலைமையில் இருக்கும் நேபாளத்தை எதிர்த்து இந்தியா உலக நீதிமன்றம் செல்லலாம். தற்போதுள்ள சூழலில் சீனா எந்த நாட்டை தாக்கினாலும் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து சீனாவை எதிர்க்க தயாராகிவிட்டன.அமெரிக்கா தென் சீனக் கடலில் சீனாவை உண்டு இல்லை என்று ஆக்கிவிடும்.இந்த வேளையில் இந்திய இராணுவமும் இந்திய அரசும் சாதுர்யமாக செயல்படும் என்றே நம்புவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X