தாம்பூலத்திற்கு பதிலாக முக கவசம், 'சானிடைசர்'

Added : ஜூன் 03, 2020 | |
Advertisement
தேனி; தேனியில் நடந்த திருமணத்தில், தாம்பூலத்திற்கு பதிலாக முக கவசம், 'சானிடைசர்' உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.தேனியைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 27; கோவை, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். இதே ஊரைச் சேர்ந்த, மதுமிதா, 22, உடன், மார்ச்சில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில், கொரோனா ஊரடங்கால் நடத்த முடியவில்லை.இதனால், மாற்றப்பட்ட திருமணம், நேற்று சமூக இடைவெளியுடன் தேனி
 தாம்பூலத்திற்கு பதிலாக முக கவசம், 'சானிடைசர்'

தேனி; தேனியில் நடந்த திருமணத்தில், தாம்பூலத்திற்கு பதிலாக முக கவசம், 'சானிடைசர்' உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

தேனியைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 27; கோவை, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். இதே ஊரைச் சேர்ந்த, மதுமிதா, 22, உடன், மார்ச்சில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில், கொரோனா ஊரடங்கால் நடத்த முடியவில்லை.இதனால், மாற்றப்பட்ட திருமணம், நேற்று சமூக இடைவெளியுடன் தேனி பெத்தாட்சி விநாயகர் கோவிலில் நடந்தது.தொடர்ந்து, மணமகன் வீட்டிற்கு வாழ்த்தச் சென்ற உறவினர்களுக்கு, தாம்பூலத்திற்கு பதிலாக, முக கவசம், 'சானிடைசர்' மற்றும் 5 கிலோ அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன.மணமக்கள் கூறுகையில், 'கொரோனா காலத்தில், திருமணம் முடித்ததன் நினைவாக, தாம்பூலத்திற்கு பதிலாக, இவற்றை வழங்கினோம். இதனால், மன நிறைவு ஏற்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X