கீழடி அகழாய்வில் விலங்கின் எலும்பு கூடு| Dinamalar

கீழடி அகழாய்வில் விலங்கின் எலும்பு கூடு

Added : ஜூன் 03, 2020 | கருத்துகள் (1) | |
திருப்புவனம்; சிவகங்கை மாவட்டம்கீழடியில் 6ம் கட்ட அகழாய்வில் விலங்கின்பெரிய அளவிலான எலும்பு கூடு கண்டறியப்பட்டுள்ளது.பண்டைய தமிழரின் நாகரீகத்தை அறியும் பொருட்டு கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. தற்போது விலங்கின் பெரிய அளவிலான எலும்பு கூடு கண்டறியப்பட்டுஉள்ளது.முதுகெலும்பு மற்றும் விலா எலும்பு கண்டறியப்பட்டுள்ளன. கிழக்கு பகுதியில் தோண்டப்பட்ட
 கீழடி அகழாய்வில் விலங்கின் எலும்பு கூடு

திருப்புவனம்; சிவகங்கை மாவட்டம்கீழடியில் 6ம் கட்ட அகழாய்வில் விலங்கின்பெரிய அளவிலான எலும்பு கூடு கண்டறியப்பட்டுள்ளது.

பண்டைய தமிழரின் நாகரீகத்தை அறியும் பொருட்டு கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. தற்போது விலங்கின் பெரிய அளவிலான எலும்பு கூடு கண்டறியப்பட்டுஉள்ளது.முதுகெலும்பு மற்றும் விலா எலும்பு கண்டறியப்பட்டுள்ளன. கிழக்கு பகுதியில் தோண்டப்பட்ட குழியில் ஏற்கனவே பானைகள், பானை ஓடுகள் கண்டறியப்பட்டன.

அதன் கீழே இந்த எலும்பு கூடு கிடைத்துள்ளது. 5ம் கட்ட அகழாய்வில் திமிலுடன் கூடிய காளை மாட்டின் எலும்பு கூடு கண்டறியப்பட்டது. இதுவரை கிடைத்த எலும்புகள் அனைத்தும் சிறு சிறு துண்டுகளாகவே கிடைத்துள்ளன. தற்போது தான் பெரிய அளவிலான எலும்பு கூடு கிடைத்துள்ளது.

பண்டைய தமிழர்கள் விலங்குகளை பழக்கி தங்களின் பாதுகாப்பிற்கு வைத்துள்ளனர் என ஆய்வாளர்கள் கருதி வரும் வேளையில் பெரிய அளவிலான எலும்பு கிடைத்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.கீழடிக்கு அருகேமணலுாரில், அகழாய்வில், 1 மீட்டர் நீளம், 50 செ.மீ., அகலத்துடன் அரை வட்ட வடிவ, உலைக் கலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கொந்தகையில், நடைபெறும் அகழாய்வில், ஈமக்காடு இருந்ததற்கான தடயங்களாக, 10 முதுமக்கள் தாழிகள் கிடைத்துஉள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X